காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட துப்பாக்கி சூடு! அதிர்ந்த உலக மக்கள்!

Photo of author

By Hasini

காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட துப்பாக்கி சூடு! அதிர்ந்த உலக மக்கள்!

ஆப்கானிஸ்தானில் தலீபான்களில் அனைத்து மாகாணங்களையும் கைப்பற்றியது. அதன் காரணமாக பலர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். பல நாடுகளும் தன் தாய் நாட்டு மக்களை வெளியேறவும் உத்தரவிட்டு உள்ளது. இது குறித்து உலக நாடுகள் பலவற்றிலும் உள்ள ஆப்கனின் மக்கள் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து  மக்கள் பலரும் தங்களது உயிரை காப்பாற்றும் விதமாக விமான நிலையங்களுக்கு சென்று தப்பவே நினைப்பது குறிப்பிடத் தக்கது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில் அங்கிருந்து வெளியேற காபூல் விமான நிலையத்தில் மக்கள் குவிந்து வருகின்றனர். விமானங்கள் அனைத்திலும் மக்கள் முண்டியடித்துக் கொண்டு இருப்பதால் நிலைமை கட்டுக்கடங்காமல் கையை மீறி போயிருக்கிறது. விமானநிலையத்தில் அமெரிக்க ராணுவ வீரர்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். மக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்.

இதற்கிடையே மக்கள் கூட்டத்தை கலைக்க வேண்டி ஆப்கானிஸ்தானில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வான் வெளியை மூடி விட்டதால், வேறு நாட்டில் இருந்தும் விமானங்கள் வரவும் முடியாத சூழல் நிலவுவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தியர்களை அழைத்து வர இந்தியாவில் இருந்து விமானம் புறப்பட இருந்த நிலையில், அங்கு விமான போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப் பட்டு உள்ளது.