தமிழகத்தில் திறக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகள்! இன்று முதல் இது கட்டாயம்!

0
73

தமிழகத்தில் திறக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகள்! இன்று முதல் இது கட்டாயம்!

கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளை நிறைவடைய போகிறது.இந்த நேரத்தில் மக்கள் அனைவரும் பாதுகாப்புடனும்,விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்து வருகிறது.அந்தவகையில் மக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது தனிமனித இடைவெளியை கடைபிடிக்குமாறு அரசாங்கம் தொடர்ந்து கூறி வருகிறது.மக்கள் இந்த பெரும் தொற்றிலிருந்து தங்களை காப்பாற்றி கொள்ள கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.

அந்தவகையில் கொரோனா முதல் அலை அதிகமாக பரவும் போதும்,அதேபோல இரண்டாம் அலை அதிகளவு பரவும் போதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் தற்காலிகமாக மூடப்பட்டது.அதுமட்டுமின்றி,ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் எடுக்கப்பட்டது.இவ்வாறே ஒன்றறை ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் இதர மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகிறது.அந்தவகையில் தமிழகத்தில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்பு சார்ந்து பயிலும் மாணவர்கள் ஆர்வத்துடன் கல்லூரிகளுக்கு சென்றனர்.கல்லூரி மாணவர்கள் வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.அதுமட்டுமின்றி தனிமனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.மாணவர்களும் இதனை கடைப்பிடித்து கல்லூரிகளுக்கு இன்று வருகை தந்துள்ளனர்.கல்லூரிக்கு வரும் மானவர்கள் அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் சோதனை எடுக்கப்பட்டு வருகிறது.

மதுரை மருத்துவ கல்லூரியில் 900 ,மாணவர்கள் பயின்று வருகின்றனர் என்பது குறிபிடத்தக்கது.அதேபோல அனைத்து மருத்து கல்லூரிகளும் ஒவ்வொரு ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும்  மதிய உணவு இடைவெளியை ஒரே சமயத்தில் விடாமல் ஒவ்வோர் ஆண்டிற்கும் மாற்றியமைத்து கொடுக்க வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்கியுள்ளனர்.அப்பொழுது தான் அதிகம் கூட்டம் கூடுவதை தவிர்க்க முடியும்.தொற்று பரவலையும் கட்டுப்படுத்த முடியும்.மருத்துவம் மற்று மருத்துவ சார்ந்து படிப்பு பயிலும் மாணவர்கள் பலர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.