கடகம் இன்றைய ராசிபலன்: சொத்து சேர்க்கை உண்டாகும் நாள்
கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான்.
இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சொத்து சேர்க்கை உண்டாகும் நாள். அதாவது சிலருக்கு எதிர்பாராத வரவுகள் வந்து சேரலாம். அதன் மூலம் பொன் பொருள் ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.
குடும்ப உறவு பலமாக இருக்கும். கணவன் மனைவி இடையே இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும். பொருளாதாரம் முன்னேற்றம் கைகொடுக்கும். வருமானம் எதிர்பார்த்தபடி அல்லது எதிர்பாராதபடி வந்து சேரலாம்.
உத்தியோகத்தில் பணியிடமாறுதல் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக பயண வாய்ப்புகள் மேம்படும். அரசியலில் இருக்கும் அன்பர்கள் வெளிநாட்டு பயணம் ஒன்றை மேற்கொள்வார்கள்.
கலைத்துறை சேர்ந்த நண்பர்களுக்கு வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழும் வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எடுக்கும் காரியங்கள் சற்று இழுபறி ஆகலாம். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் இந்த நேரத்தில் உற்றார் உறவினர் வருகையால் சந்தோஷத்தை காண்பார்கள். ஆரோக்கியத்தில் கவனம் அவசியம்.
மாணவ மாணவிகளுக்கு கல்வியில் ஒருவித பிடிப்பு வந்து சேரும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் எடுக்கும் முயற்சிகளில் சற்று கால தாமதம் ஆகலாம். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு சற்றே எதிர்பாராத வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் வந்து சேரும்.
இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக நல்லதே நடக்கும்.