தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு நாளை தீர்ப்பு!!

Photo of author

By Vinoth

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு நாளை தீர்ப்பு!!

Vinoth

Kallakurichi corruption case which created sensation in Tamil Nadu will be judged tomorrow!!

கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி அன்று எத்தனால்   கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் உடல் நலம்  பாதிக்கப்பட்டு  கிட்டதட்ட 193 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் சுமார்  65க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  இந்த கள்ளகுறிச்சி  கள்ளச்சாராயம் மரண வாழ்க்கை சிபிசிஐடி போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயா வழக்கு விசாரணை சிபிஐ-க்கு  மாற்ற வேண்டும் என  பாஜக மற்றும் பாமக வேண்டுகோள் விடுத்தது. அதன் காரணமாக  கட்சிகள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுக்கள் நாளை ( நவம்பர் 20ஆம் தேதி)  விசாரணைக்கு வருகிறது.  எனவே நாளை காலை 10 மணிக்கு நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமார்,  பி பி பாலாஜி அமர்வு இந்த விவகாரம் சம்பந்தப்பட்ட மனுக்களை விசாரித்து தீர்ப்பு வழங்க உள்ளது.  மேலும் இந்த தீர்ப்பானது யாருக்கு சாதகமாக முடியும் என்று யாராலும் தணிக்க முடியவில்லை.

மேலும் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசின் மூலம் ரூபாய் 10 லட்சம் வழங்கப்பட்ட து. இதனை பல அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் என எதிர்ப்பு விமர்சனம் தெரிவித்தனர். எனில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் இழப்பிடு எந்த மாநில அரசும் கொடுத்தது இல்லை இந்த செயலை ஆதரிக்கும் வகையில் இந்த அரசு செயல்படுகிறது என்று அனைவரும் கூறிவருகின்றனர்.