கள்ளக்குறிச்சி சம்பவம் மீண்டும் சிபிசிஐடி மனு விசாரணை! இதனால் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்குமா?..
கள்ளக்குறிச்சியை அடுத்த கணியான் ஊரில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது.இங்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அப்பள்ளியில் விடுதியும் செயல்பட்டு வருகிறது. விடுதியில் பிளஸ் டூ மாணவி ஒருவர் படித்து வந்தார்.
இவர் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதி. இவர் கடந்த வாரங்களுக்கு முன்பு மர்மமான முறையில் இருந்தார். அவர் பள்ளியின் மேல் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அப்பள்ளியின் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டிருந்தது.
ஆனால் இதனை ஏற்க மறுத்த மாணவியின் பெற்றோர்கள் தங்கள் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் அந்த சாவுக்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி அன்று மாணவர் அமைப்பினர் பல்வேறு அமைப்புகளை சார்ந்த இளைஞர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதனால் அங்கு பெரும் போர்க்களம் போல காட்சியளித்தன. இதனால் அப்பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது.
எனவே மாணவி ஸ்ரீமதி தாய் செல்வி அளித்த புகாரின் பேரில் சந்தேகம் மரணம் என்ற பிரிவின் கீழ் சின்ன சேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி ,பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியல் ஆசிரியை ஹரிப்பிரியா ,கணித ஆசிரியை கீர்த்திகா, ஆகியோர் மீது தற்கொலை தூண்டுதல் பிரிவு 35 இன் கீழ் பாதுகாப்பில் உள்ளவர்களுக்கு தொல்லை கொடுத்தால் பிரிவு 75 இன் கீழ் ஆகிய வழக்கு பதிவு செய்து ஐந்து பேரையும் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் ரவிக்குமார் பட 5 பேரையும் மூன்று நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி நேற்று சி.பி.சி.ஐ.டி போலீசார் தரப்பில் அரசு வக்கீல் வைத்தியநாதன் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்மேலும் இம்மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி புஷ்பராணி மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என உத்தரவிட்டார்.இதனால் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.