கள்ளக்குறிச்சி மாணவி மரணம் வழக்கு தொடர்ந்த தந்தை! அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்!

0
66

கடந்த 13ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த சக்தி மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி 3வது மாடியிலிருந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த பள்ளிக்கு விரைந்த அந்த மாணவியின் தாய் மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோர் மாணவியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

ஆனால் மாணவி மாடியிலிருந்து குதித்ததாக சொல்லப்பட்ட இடத்தில் அவர் குதித்தவருக்கான எந்த விதமான அடையாளமும் காணப்படவில்லை. காவல்துறையினர் விசாரணை செய்திருந்தால் அவர்கள் செய்த விசாரணையின் அடையாளமும் எதுவும் காணப்படவில்லை என்று அந்த மாணவியின் தாய் தெரிவித்திருக்கிறார். மேலும் என்னுடைய மகளின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், சுமார் 3 நாட்களாக அவர் மரணத்தின் மீது இருக்கின்ற மர்மத்தை விளக்க வேண்டும் என்று தெரிவித்து பள்ளி வளாகத்தில் உறவினர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டவர் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி இருந்தார்கள். இந்த அமைதிப் போராட்டம் திடீரென்று நேற்று வன்முறையாக வெடித்தது .

ஆகவே அந்த பள்ளி வளாகம் திடீரென்று சூறையாடப்பட்டது பள்ளியில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் அனைத்தும் தீ வைத்து கொளுத்தப்பட்டனர். அதோடு காவல்துறையினரின் வாகனமும் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

மேலும் அந்த பள்ளியில் இருந்த பொருட்கள் அனைத்தும் சூறையாடப்பட்டனர், மாணவர்களின் பள்ளி சான்றிதழ்கள் அனைத்தும் தீ வைத்து எரிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இறந்து போன மாணவியின் தந்தை ராமலிங்கம் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்திருக்கிறார். இந்த செய்தியை அறிந்தவுடன் கடந்த 14ஆம் தேதி அவர் தாய் நாட்டிற்கு விரைந்து வந்தார் என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், போராட்டம் பெரிதாகி அந்தப் போராட்டம் கலவரமாக வெடித்ததை தொடர்ந்து தன்னுடைய மகளின் சாவில் சந்தேகம் இருக்கிறது. ஆகவே மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் தகுதியான மருத்துவர்களை வைத்து உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமலிங்கத்தின் சார்பாக வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதி வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது எதற்காக போராட்டம் செய்ய வேண்டும். அப்படி போராட்டம் செய்ய வேண்டுமென்றால் அந்த போராட்டம் நடத்துவதற்கு அனைவருக்கும் அனுமதி உண்டு.

ஆனால் பள்ளி மாணவர்களின் சான்றிதழ்களை எரிப்பதற்கு யார் அனுமதி கொடுத்தது? தற்போது அப்படி எரிக்கப்பட்ட சான்றிதழ்கள் இல்லையென்றால் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் நிலை என்ன? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

அதோடு அந்த மாணவியின் தந்தை தகுதியான மருத்துவர் கொண்டு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் இந்த மறு உடற்பூறாய்வு செய்வதற்கு நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது.

அதாவது தங்கள் தரப்பில் கூறப்படும் மருத்துவர் வைத்து உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும், அந்த உடற்கூறாய்வை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் என்று நீதிபதி தெரிவித்திருக்கிறார்.

அதேநேரம் இதற்கு முன்னால் உடற்கூறாய்வு செய்த மருத்துவர்கள் தகுதியற்றவர்களா? அப்படியானால் நீங்கள் மருத்துவத்தில் நிபுணத்துவம் வாய்ந்தவரா? என மாணவியின் தந்தைக்கு கேள்வி எழுப்பி இருக்கிறது.

அதேநேரம் இந்த வழக்கில் இதுவரையில் நடைபெற்றிருக்கும் விசாரணையின் நிலை என்ன? உளவுத்துறையில் இருந்து காவல் துறைக்கு ஏதாவது அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதா? இந்த கலவரத்தின் போது காவல்துறையினர் சரிவர செயல்பட்டதா என்று தங்களுக்கு சந்தேகம் இருக்கிறது என்று நீதிபதிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

ஆகவே இந்த வழக்கின் நிலவரம் என்ன என்பது தொடர்பாக உடனடியாக எங்களுக்கு காவல்துறையின் சார்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.