நெஞ்சு சளியை கரைக்கும் “கற்பூரவல்லி கஷாயம்”!! கெட்டி சளி கரைந்து வர ஒரு நாள் மட்டும் குடிங்க போதும்!!

Photo of author

By Divya

நெஞ்சு சளியை கரைக்கும் “கற்பூரவல்லி கஷாயம்”!! கெட்டி சளி கரைந்து வர ஒரு நாள் மட்டும் குடிங்க போதும்!!

Divya

சாதாரண சளி பாதிப்பாக இருந்தால் ஓரிரு நாட்களில் சரியாகிவிடும்.அதுவே நெஞ்சு சளி பாதிப்பாக இருந்தால் அவை மாதங்கள் ஆனாலும் சரியாகாது.நெஞ்சு சளி பாதிப்பு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்க கூடிய ஒரு பிரச்சனையாக உள்ளது.நீர் போன்ற சளி கெட்டியாகவோ மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் வந்தாலோ அவை நெஞ்சு சளிக்கான அறிகுறிகள் ஆகும்.

நெஞ்சு சளிக்கான காரணங்கள்:-

1)பருவநிலை மாற்றம்
2)நோய் எதிர்ப்பு சக்தி குறைதல்
3)ஒவ்வாமை
4)நுரையீரல் தொற்று

நெஞ்சு சளி அறிகுறிகள்:-

1)கெட்டி சளி
2)மூச்சு விடுவதில் சிரமம்
3)தூக்கமின்மை
4)உடல் சோர்வு
5)தொடர் இருமல்

நெஞ்சு சளியை கரைக்கும் கற்பூரவல்லி கஷாயம்:

தேவையான பொருட்கள்:-

1)கற்பூரவல்லி தழை – 4
2)சீரகம் – 1/2 தேக்கரண்டி
3)மிளகு – 1/4 தேக்கரண்டி
4)கிராம்பு – இரண்டு
5)பூண்டு பல் – இரண்டு
6)இஞ்சி – ஒரு துண்டு
7)ஏலக்காய் – ஒன்று
8)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

1.முதலில் நான்கு கற்பூரவல்லி தழை எடுத்து தண்ணீர் ஊற்றி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

2.பிறகு அரை தேக்கரண்டி சீரகம் மற்றும் கால் தேக்கரண்டி மிளகை உரலில் போட்டு கொரகொரப்பாக இடித்துக் கொள்ள வேண்டும்.

3.பிறகு இரண்டு பல் பூண்டை தோல் நீக்கிவிட வேண்டும்.அதேபோல் ஒரு பீஸ் இஞ்சியை தோல் நீக்கி கொள்ள வேண்டும்.இவை இரண்டையும் உரலில் போட்டு கொரகொரப்பாக இடித்துக் கொள்ள வேண்டும்.

4.பின்னர் ஒரு ஏலக்காயை,கிராம்பை இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள கற்பூரவல்லி தழையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

5.அடுத்து பாத்திரம் ஒன்றை எடுத்து நறுக்கிய கற்பூரவல்லி தழையை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இடித்த சீரக மிளகை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.

6.பின்னர் பூண்டு,இஞ்சி விழுதை அதில் போட்டு கலந்துவிட வேண்டும்.பிறகு கிராம்பு ஏலக்காயை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி குறைவான தீயில் கஷாயம் காய்ச்ச வேண்டும்.

7.மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரை குறைந்த தீயில் கொதிக்க வைத்த பிறகு அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

8.பின்னர் இந்த பானத்தை ஐந்து நிமிடங்களுக்கு ஆறவைக்க வேண்டும்.பிறகு ஒரு கிளாஸிற்கு இந்த பானத்தை பருக வேண்டும்.காலை,மதியம்,இரவு என மூன்றுவேளை இந்த கஷாயம் பருகினால் நெஞ்சு சளி பிரச்சனை சரியாகிவிடும்.