காவிரி ஆற்றில் குளிக்க வந்த கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் மூழ்கி உயிரிழப்பு!

0
238
#image_title

காவிரி ஆற்றில் குளிக்க வந்த கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் மூழ்கி உயிரிழப்பு!

சேலம் சங்ககிரி அருகே உள்ள கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளிக்க வந்த கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் மூழ்கி உயிரிழப்பு.

ஆற்றில் மூழ்கிய மணிகண்டன், முத்துசாமி, பாண்டியராஜன் ஆகிய மூவரின் உடல் மீட்கப்பட்ட நிலையில் மீதமுள்ள மீதமுள்ள மணிகண்டன் என்ற மாணவரின் உடலை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக காவிரி ஆற்றில் 10 மாணவர்கள் குளிக்க வந்த நிலையில் நான்கு பேருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

கல்லூரி மாணவர்களின் பெற்றோர்கள் கதறிகளும் காட்சி பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது.

Previous articleவன்னியர் இட ஒதுக்கீடு: பாமக உறுப்பினர் சொல்வது போல செய்ய முடியாது – அமைச்சர் ராஜகண்ணப்பன்
Next articleமோகன் ஜி படத்தில் காட்டப்பட்ட விவகாரம்! உச்ச நீதி மன்றம் மத்திய அரசுக்கு கேள்வி