கல்யாண வீட்டு பருப்பு சாம்பார்!! சமையல்காரர் சொன்ன டிப்ஸ்! அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே!
பருப்பு சாம்பார் நம் பாரம்பரிய உணவுகளில் ஒன்று.நம்மில் பெரும்பாலானோருக்கு துவரம் பருப்பு என்றால் அலாதி பிரியம்.இந்த பருப்பில் பல்வேறு சுவையில் சாம்பார் செய்யப்பட்டு வருகிறது.காய்கள் போட்டு,போடாமல்,கீரை போட்டு செய்வது என்று பல விதமாக செய்யப்பட்டாலும் கல்யாண வீட்டு ஸ்டைலில் செய்யப்படும் பருப்பு சாம்பார் தான் பெஸ்ட்.பருப்பு பிடிக்காதவர்கள் கூட விரும்பி உண்பார்கள்.சுவை அவ்வளவு அருமையாக இருக்கும்.இந்த ருசியான சாம்பார் எப்படி செய்வது என்ற செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.
தேவையான பொருட்கள்:-
*துவரம்பருப்பு – 2 கப்
*புளி – 1 பெரிய எலுமிச்சை பழ அளவு
* தக்காளி – 2
*பச்சை மிளகாய் – 6
*பெரிய வெங்காயம் – 3
*பூண்டு – 10 பற்கள்
*பெருங்காயம் – தேவையான அளவு
*மஞ்சள்தூள் – தேவையான அளவு
*மிளகாய் தூள் – தேவையான அளவு
*பச்சை மாங்காய் – 1
*கத்தரிக்காய் – 8
*முருங்கைக்காய் – 2
*கல் உப்பு – தேவையான அளவு
*கருவேப்பிலை – 1கொத்து
*கொத்தமல்லி தழை – சிறிதளவு
சாம்பார் பொடி செய்ய தேவையான பொருட்கள்:-
*தனியா விதை – 1 தேக்கரண்டி
*காய்ந்த மிளகாய் – 4
*வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
*கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
*பெருங்காய்த்தூள் – 2 சிட்டிகை அளவு
செய்முறை:-
1.அடுப்பில் குக்கர் வைத்து அதில் துவரம் பருப்பு, தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு பெருங்காயம் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 விசில் விட்டு எடுக்கவும்.
2.அடுப்பில் கடாய் வைத்து அதில் நறுக்கி வைத்துள்ள கத்திரிக்காய்,முருங்கைக்காய் போட்டு மிளகாய் தூள்,மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 10 முதல் 2 நிமிடம் கொதிக்க விடவும்.
3.பின்னர் அதில் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள மாங்காய் சேர்த்து வேக விடவும்.சிறிது நேரம் கழித்து வேக வைத்த பருப்பு கலவையை அதில் சேர்க்க வேண்டும்.
4.பக்கத்துக்கு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் தனியா, வெந்தயம், கடலைப்பருப்பு,காய்ந்த மிளகாய் உள்ளிட்டவற்றை சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து எடுத்து பொடி செய்து வைத்து கொள்ளவும்.பிறகு அதனை கொதித்து கொண்டிருக்கும் குழம்பில் சேர்க்கவும்.நன்கு வெந்த பின்னர் இறக்கி விடவும்.
5.அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அவை சூடேறியதும் கடுகு, கருவேப்பிலை போட்டு பொரிக்கவும்.பின்னர் காய்ந்த மிளகாய்,பூண்டு சேர்த்து தாளிக்கவும்.இந்த கலவையை இறக்கி வைத்துள்ள சாம்பாரில் சேர்த்து வாசனைக்காக சிறிதளவு கொத்தமல்லி சேர்த்து கலக்கவும்.