திருமணத்தடை நீக்கும் கல்யாண வெங்கடேச பெருமாள்!

0
84

திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கிறது நார்த்தாம்பூண்டி என்ற கிராமம் இந்த திருத்தளத்தில் பிரம்மதேவன் வழிபட்ட திருவுந்தி பெருமாளும், கல்யாண வெங்கடேச பெருமாளும், கோவில் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு பிரளய காலத்தின் போது இந்த பிரபஞ்சம் மொத்தமும் அழிந்து போனது, அப்போது உண்டான வெள்ளத்தில் பெருமாள் ஆலிலை மீது குழந்தை கண்ணனாக மிதந்து வந்தார்.

மறுபடியும் இந்த பிரபஞ்சத்தை உண்டாக்க நினைத்த அவர், தன்னுடைய நாபிக்கலாமலத்திலிருந்து பிரம்ம தேவனை ஏற்படுத்தினார். அவருக்கு படைப்பு தொழில் புரியும் சக்தியையும் வழங்கினார், இந்த தொழிலை ஏற்ற பிரம்மதேவன் நாராயணருக்கு நன்றி செலுத்தும் விதமாக பூலோகம் வந்து ஒரு கோவிலை அமைத்து வழிபட்டார்.

அப்படி பிரம்மதேவனால் அமைக்கப்பட்ட ஆலயமே திருவுந்திப் பெருமாள் திருக்கோவில்.

இங்கே பத்மாவதி தாயார், ஆண்டாள், நாச்சியார், உள்ளிட்டவருக்கும் தனித்தனி சந்ததிகள் இருக்கின்றன. இது ஒரு திருமண தடை நீக்கும் திருத்தலமாக விளங்கி வருகிறது. இங்கு இருக்கின்ற கல்யாண வெங்கடேச பெருமாளுக்கு மட்டை தேங்காய் வைத்து பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள்.

கோவிலில் நீராடிவிட்டு ஈரத்தணியுடன் கல்யாண வெங்கடேச பெருமாளுக்கு மட்டை தேங்காயை வைத்து வழிபட்டு கோவிலை 27 முறை வலம் வந்தால் மணவாழ்வு அடுத்த மாதம் அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

வேண்டுதல் நிறைவேறியவுடன் தம்பதி சமேதராக இங்கு வந்து வழிபடுபவர்களின் எண்ணிக்கை இந்த பெருமாளின் பெருமையை பறைசாற்றும் விதமாக அமைந்திருக்கிறது.

திருவண்ணாமலையிலிருந்து வேலூர் செல்லும் சாலையில் சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் நாயுடுமங்கலம் என்ற கிராமம் இருக்கிறது. இங்கு இருக்கின்ற கூட்டு ரோட்டில் 5 கிலோமீட்டர் தூரம் சென்றால் நார்த்தாம்பூண்டியை அடையலாம்.