கமகமக்க ஆற்காடு மட்டன் தொடை கறி குழம்பு – சுவையாக செய்வது எப்படி?
ஆட்டு இறைச்சி வாங்கும் போது, ஆட்டின் தொடைப் பகுதிகளில் சதை அதிகமாக இருக்கும். அதனால்தான் அனைவரும் ஆடு தொடைக்கறி என்று கேட்டு வாங்குவார்கள். ஆனால், தொடை பகுதியில் சதை அதிகமாக இருந்தாலும், சாப்பிட சற்று கடினமாகத்தான் இருக்கும். அதற்கு முக்கிய காரணம், ஆடு நடக்கிறதால், அதன் தொடை பகுதி தசை நன்றாக இறுகி கெட்டியாகிவிடும்.
இப்படி இறுக்கமான தொடைக்கறியில் எப்படி மிருதுவாக, சுவையாக ஆற்காடு மட்டன் தொடைக்கறி குழம்பு செய்யலாம் என்று பார்ப்போம் –
தேவையான பொருட்கள்
மட்டன் – 1 கிலோ
வினிகர் – 2 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
மிளகுத் தூள் – 4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஆட்டு தொடைக்கறியை வாங்கிட்டு வந்து நன்றாக சுத்தம் செய்து கட்டி செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஆட்டுக்கறியில் உப்பு, மிளகுத் தூள், வினிகர், மஞ்சள் தூள்,சிறிதளவு எண்ணெய் சேர்த்து ஒன்றாகக் கலந்து கிளறி வைக்க வேண்டும்.
பின்னர், கறித்துண்டை ஒவ்வொன்றாக எடுத்து சப்பாத்திக் கட்டையால் தட்டி சதுரமாக பரப்ப வேண்டும்.
இதன் பிறகு, கறித்துண்டுகளை எடுத்து மிளகு தூளில் பிரட்டி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.
இதனையடுத்து, மிளகு தூளில் பிரட்டி வைத்துள்ள கறியை ஓவனில் வைத்து எடுக்க வேண்டும்.
இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்தபிறகு இறக்கி பரிமாறினால் சுவையான ஆற்காடு தொடை கறி ரெடியாகிவிடும்.