கேள்வி கேட்ட தொண்டரை ரைட் லெப்ட் வாங்கிய கமல்ஹாசன்! ஆட்சிக்கு வரும் முன்னே இவ்வளவு கடுமையா?

Photo of author

By Rupa

கேள்வி கேட்ட தொண்டரை ரைட் லெப்ட் வாங்கிய கமல்ஹாசன்! ஆட்சிக்கு வரும் முன்னே இவ்வளவு கடுமையா?

வரும் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்நிலையில் மக்களிடம் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பலவகை நன்மைகளை செய்வோம் என அறிக்கைகளை வெளியிட்டு வந்துள்ளனர்.அதனையடுத்து பிறக்கட்சிகளுடன் கூட்டணின் வைத்துக்கொண்டும் வாக்குகளை சேகரித்தும் வருகின்றனர்.

அந்தவகையில் மக்கள் மீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முதலில் சுயேட்சியாக நிற்பதாக கூறினார்.அதன்பின் முப்பெரும் கூட்டணி என்று சரத்குமாருடன் கூட்டணி வைத்துக்கொண்டார்.கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குகளை திரட்ட ஆட்டோவில் சென்றார்.அதன்பின் மக்களோடு  மக்களாக தன்னைக் காட்ட வேண்டும் என்பதற்காக பேருந்தில் சென்றும் மேலும்  அவர்களுடன் அமர்ந்தி தேநீரையும் பருகினார்.

இந்நிலையில் நேற்று கோவை மாவட்டத்தில்,பீளமேட்டில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்,அங்கிருந்த தொண்டர் ஒருவர் கமல்ஹாசனை பார்த்து சதிலீலாவதி படத்தில் வரும் பாஷையை பேசும்படி கேட்டுள்ளார்.அதற்கு கமல்ஹாசன் சரமரியாக தொண்டர் என்னும் பார்க்காமல் பதிலைக் கூறினார்.அவர் கூறியது,நான் இங்கு வசனம் பே,நடனம் ஆட மற்றும் பாட்டுப்பாட வரவில்லை.எதிர்காலத்தை பற்றி பேச வந்துள்ளேன்.

அப்படி உங்களுக்கு நடனம்,வசனம்,பாட்டு எல்லாம் கேட்கனும்னா யூடுப் பில் சென்று பாருங்கள்.இல்லயென்றால் திரையரங்குகளில் சென்று டிக்கெட் வாங்கி பாருங்கள் எனக் கறாராக பேசினார்.இவரது இந்த பேச்சானது  அனைவரயும் வியப்பில் ஆழ்த்தியது.