அட ! இதுக்கு பேருதான் டூ இன் ஒன் ஆ !

0
71
Medicinal properties in everyday food products !!
Medicinal properties in everyday food products !!

அட ! இதுக்கு பேருதான் டூ இன் ஒன் ஆ !

நிலவேம்பு:

நாம் இது வரை நிலவேம்பு கஷாயத்தை நோய் எதிர்ப்பு மருந்தாகத்தான் அருந்தி இருப்போம். அனால் தற்போது  நிலவேம்பு கஷாயத்தை குடித்தால் கல்லீரலில் உள்ள வீக்கத்தை குறைக்கும் ஆற்றல்  நிலவேம்பு கஷாயத்திற்கு உள்ளது என ஆராய்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

சுண்டைக்காய்:

சர்க்கரை நோய்க்காக பலரும் பல மருத்துவமனைகளுக்கு சென்றுகொண்டிருக்கிறோம் இந்நிலையில் சர்க்கரை நோய் ஆரம்பகட்டத்திலேயே குணமாக இதற்கு நம் வீட்டிலேயே ஒரு சிறந்த மருத்துவம் உள்ளது. அடிக்கடி  சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் இரத்தச் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம்.

கலி:

நம் அன்றாட வாழ்வில் செரிமான பிரச்சனைக்காக பல்வேறு மாத்திரைகளை சாப்பிடுகின்றோம் ஆனால் இதற்கும் நம் வீட்டிலேயே ஒரு சிறந்த மருத்துவம் உள்ளது. வெந்தயத்தில் கலி செய்து சாப்பிட்டால் செரிமான பிரச்சனை வராது. கொரானா நோய்தொற்று பரவிவரும் நிலையில் சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் கொரானா நோய்தொற்று உறுதி செய்யப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

புளியம்பூ, தேங்காய் மற்றும்  உப்பு:

இந்நிலையில் நம் வீட்டிலேயே  சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வுக்கான புளியம்பூ, தேங்காய் மற்றும்  உப்பு இந்த மூன்று பொருள்களையும் சேர்த்து நன்றாக சட்னி போல் அரைத்து சாப்பிட்டால்  சளி, இருமல் குணமாகும்.

கத்தரிகாய்:

உடலில் ஏற்படும் வீக்கதிற்கு மருந்தகத்திற்கு சென்று இங்கிலீஷ் மருந்துகளை வாங்கி பயன்படுத்தாமல் எளிய முறையில் நம் வீட்டிலேயே  மருந்து தயாரித்து உபயோகிக்கலாம். அதற்கு கத்தரிகாயை நன்றாக அரைத்து வீக்கம் உள்ள பகுதிகளில் தொடர்ந்து தடவி வந்தால் வெகு வேகத்தில் வீக்கம் குறையும்.