தொடர்ந்து கடன் வாங்கும் கமலஹாசன்!! இப்படியும் ஒரு பழக்கமா.. காரணம் என்ன!!

Photo of author

By Gayathri

தொடர்ந்து கடன் வாங்கும் கமலஹாசன்!! இப்படியும் ஒரு பழக்கமா.. காரணம் என்ன!!

Gayathri

Kamal Haasan keeps taking loans!! Is this a habit.. What is the reason!!

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி படிப்படியாக தன்னுடைய திறமை மட்டுமல்லாது சினிமா துறையும் வளர்த்து வருபவர் கமலஹாசன் என்று கூறினால் மிகையாகாது.

தன்னிடம் அதிக அளவில் பணம் இருந்தும் கடன் வாங்குவதை தற்போது வரை ஒரு பழக்கமாகவே கமலஹாசன் அவர்கள் மேற்கொண்டு வருவதாகவும் இதனை ஒரு டிசிப்ளின் ஆகவே கமலஹாசன் அவர்கள் பின்பற்றி வருவதாகவும் தயாரிப்பாளர் கே ஆர் அவர்கள் கமலஹாசனை பற்றி தெரிவித்திருக்கிறார்.

கமலஹாசன் குறித்து கே ஆர் அவர்கள் தெரிவித்திருப்பதாவது :-

தன்னிடம் அதிக அளவில் பணம் இருந்தாலும் ஒருவரிடம் இருந்து கடன் பெற்றுக் கொண்டு அதனை சரிவர திருப்பி செலுத்துவது என்பது கமலஹாசனின் வாழ்வில் இன்று வரை பின்பற்றப்பட்டு வரும் ஒரு பழக்கமாக உள்ளது என்றும் அவரிடம் அதிக அளவில் பணம் இருக்கும் பொழுது அவர் ஏன் மற்றவரிடம் கடன் வாங்க வேண்டும் என்ற கேள்விகளுக்கு கமலஹாசன் அவர்கள் அளித்த விளக்கமானது தன் நண்பர்களிடமிருந்து கடன் பெற்றுக் கொண்டு அதற்கான வட்டியை சரிவர திருப்பி செலுத்தும் பொழுது தன்னுடைய நண்பர்களின் வாழ்வானது செழிப்பாக அமையும் என்று கமலஹாசன் அவர்கள் தன்னுடைய நண்பர்களிடம் என்றாலும் கடன் பெற்று வருவதாக தயாரிப்பாளர் கே ஆர் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

இதற்கு ரசிகர்கள் பலரும் பணம் இருக்கும் ஒருவரிடம் கமலஹாசன் கடன் பெற்று அவர்களுக்கு வட்டியாக திருப்பி கொடுக்கிறார் என்றால் பணம் இருக்கும் இடத்திலேயே தான் மீண்டும் போய் சேருகிறது இதற்கு பெயர் டிசிப்ளினா ? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.