தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரசை கட்டுபடுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆளும் கட்சியான மற்றும் எதிர்க்கட்சி திமுக என தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சியும் மக்களை கொரோனா பாதிப்பிலிருந்து மீட்க செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தும் வகையில் அங்குள்ள தன்னார்வலர்களை ஒன்றிணைக்க புதிய இயக்கத்தை நடிகரும்,மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தொடங்கி வைத்துள்ளார்.
நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரசை கட்டுபடுத்தும் வகையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனாவை தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது.
ஆனால் சமீப காலமாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் சூழலில் தலைநகரான சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது தொடர்ந்து அதிகரித்த வண்ணமேயுள்ளது.
கடந்த சில தினங்களாக தினமும் 1000க்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் தொடர்ந்து பரவிவரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உதவுவதற்காக தன்னார்வலர்களை ஒருங்கிணைக்கும் வகையில் நாமே தீர்வு என்ற இயக்கத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆரம்பித்துள்ளார்.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.
இதன் மூலம் தன்னார்வலர்களை ஒன்றிணைத்து மக்களுக்கு தேவையான உணவுகளை வழங்குதல், வீடுகளில் இருக்க அறிவுறுத்தல், மருத்துவ உதவி செய்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு சென்னையில் கொரோனா பாதிப்பை குறைக்க நாமே தீர்வு மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.