பிரபல ஓடிடியில் வெளியானது கமல் & லோகேஷின் ’இண்டஸ்ட்ரி’ ஹிட் ‘விக்ரம்’

0
152

பிரபல ஓடிடியில் வெளியானது கமல் & லோகேஷின் ’இண்டஸ்ட்ரி’ ஹிட் ‘விக்ரம்’

விக்ரம் திரைப்படம் இன்னமும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் அரசியலுக்கு சென்ற பின்னர் சினிமாவில் சரியாக கவனம் செலுத்தவில்லை. கடைசியாக அவர் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் 2 திரைப்படமும் படுதோல்வியாக அமைந்தது. இதனால் கடந்த நான்கு ஆண்டுகளில் அவர் படம் எதுவும் வெளியாகாத நிலையில் ஜூன் 3 ஆம் தேதி ‘விக்ரம்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது.  கமலுடன் விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்த விக்ரம் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைத்திருந்தார்.

வெளியானது முதல் இப்போது வரை வெற்றிகரமாக ஓடிவரும் விக்ரம் திரைப்படம் இதுவரை 450 கோடி ரூபாய்க்கும் மேல் வெற்றிகரமாக திரையரங்குகள் மூலம் வருவாய் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 170 கோடி ரூபாய்க்கு மேல் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை தமிழகத்தில் எந்தவொரு படமும் படைக்காத வசூல் சாதனை இது.

இந்நிலையில் ரிலீஸுக்கு பின்னர் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் தயாரிப்பாளராக மட்டும் சுமார் 120 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் வெளியான தமிழ் படங்களில் தயாரிப்பாளருக்கு இந்த அளவுக்கு லாபம் கொடுத்த தமிழ்ப் படம் எதுவும் இல்லை என கோலிவுட் வட்டாரமே ஆச்சர்யத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

கணிசமான திரையரங்குகளில் இன்னமும் விக்ரம் ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் விக்ரம் திரைப்படம் ஐந்து மொழிகளில் நள்ளிரவு முதல் ஸ்ட்ரீம் ஆகியுள்ளது. இதையடுத்து ரசிகர்கள் பலரும் மீண்டும் ஒருமுறை படத்தைப் பார்த்து தங்கள் கருத்துகளை சமூகவலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

Previous articleஉக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதலால் 3.50 லட்சம் பேர் வெளியேற வலியுறுத்தல்!!
Next articleஒரே பள்ளியில் 19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி! பள்ளிகள் மூடப்படுமா?