அரண்மனையை தொடர்ந்து காஞ்சனா சீரிஸ்!! 100 கோடி வசூல்.. உற்சாகத்தில் லாரன்ஸ்!!

Photo of author

By Divya

அரண்மனையை தொடர்ந்து காஞ்சனா சீரிஸ்!! 100 கோடி வசூல்.. உற்சாகத்தில் லாரன்ஸ்!!

கடந்த சில மாதங்களாக தமிழில் வெளியான படங்கள் ரசிகர்களை பெரிதளவில் ஈர்க்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.சில முன்னணி ஹீரோக்களின் பெரிய பட்ஜெட் படங்கள் கூட எதிர்பார்த்த வசூலை குவிக்காமல் திணறியது.இவ்வாறு தமிழ் சினிமா வீழ்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் அதை தூக்கி நிறுத்தும் விதமாக அரண்மனை பாகம் 4 வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

முதலில் வெளியான அரண்மனை பாகம் 1 பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த நிலையில் அதன் பின்னர் வெளியான அரண்மனை 2,அரண்மனை 3 ஆகியவை சுமாரான வெற்றியை பெற்றது.இந்நிலையில் சுந்தர் சி,தமன்னா,ராசி கண்ணா,யோகி பாபு,சந்தோஷ் பிரதாப்,கோவை சரளா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான அரண்மனை 4 வெளியான முதல் நாளே உலகம் முழுவதும் 3.60 கோடி வசூலித்து படக்குழு எதிர்பார்த்ததை விட அரண்மனை 4க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் சுந்தர் சியின் அரண்மனை 4 வரவேற்பை தொடர்ந்து தற்பொழுது ராகவா லாரன்ஸ் காஞ்சனா சீரிஸ் எடுக்க முடிவு செய்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

ராகவா லாரன்ஸ் இயக்கி,நடித்த “முனி” கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.இதை தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு முனி பார்ட் 2 ‘காஞ்சனா’ என்ற த்ரில்லர் ஹிட் படத்தை கொடுத்தார்.

இதன் பின்னர் வெளியான காஞ்சனா 2,காஞ்சனா 3 உள்ளிட்ட படங்கள் ஓரளவு வரவேற்பு பெற்றது.இந்நிலையில் தற்பொழுது ராகவா லாரன்ஸ் அவர்கள் காஞ்சனா பார்ட் 4 உருவாக்க முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

காஞ்சனா சீரிஸை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வெளியிட்டது.இந்த நிலையில் காஞ்சனா 4 பாகத்தை லாரன்ஸ் தனது சொந்த பேனரான ராகவேந்திரா புரொடக்‌ஷனிலேயே தயாரித்து வெளியிட முடிவு செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.இந்நிலையில் அரண்மனை 4 வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் லாரன்ஸின் காஞ்சனா 4 மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.