KANDANKATHIRI: கண்ணுக்கு தெரியாத நோய்களையும் கண்டமாக்கும் கண்டங்கத்திரி!! இதன் மருத்துவ குணங்கள் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!

Photo of author

By Divya

KANDANKATHIRI: கண்ணுக்கு தெரியாத நோய்களையும் கண்டமாக்கும் கண்டங்கத்திரி!! இதன் மருத்துவ குணங்கள் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!

குப்பைமேட்டில் செழிப்பாக வளரும் மூலிகை செடிகளில் ஒன்று கண்டங்கத்திரி.இந்த செடியின் காய்கள் பார்க்க சமையலுக்கு பயன்படுத்தும் கத்தரிக்காய் போன்று இருக்கும்.பூக்கள் நீல நிறத்திலும் காய்கள் மஞ்சள் நிறத்திலும் காணப்படும்.இந்த செடியின் வேர்,பூ,காய்,பழம்,விதை,பட்டை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவையாக இருக்கிறது.

இவை உடலில் உள்ள பல வியாதிகளை குணமாக்க உதவுகிறது.சளி,தலைவலி,பல் ஈறு பிரச்சனை,சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைக்கு உரிய தீர்வாக இந்த கண்டங்கத்திரி மூலிகை செடி திகழ்கிறது.

கண்டங்கத்திரி மூலிகையின் பயன்கள்:

கண்டங்கத்திரி காயை அரைத்து சாறு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி,சுவாசப் பிரச்சனை சரியாகும்.

கண்டங்கத்திரி காயை அரைத்து கசாயம் செய்து குடித்து வந்தால் ஆஸ்துமா குணமாகும்.

கண்டங்கத்திரி இலையை அரைத்து நெற்றி மீது பற்று போட்டு வந்தால் தீராத தலைவலி குணமாகும்.

கண்டங்கத்திரி பழத் துண்டுகளை நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வினாத்தாள் சைனஸ் குணமாகும்.

கண்டங்கத்திரி செடியை எரித்து அதன் சாம்பலில் பற்களை துலக்கி வந்தால் பல்,ஈறு தொடர்பான பாதிப்புகள் குணமாகும்.

கண்டங்கத்திரி இலையை அரைத்து சாறு எடுத்து சிறிது தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகள் அனைத்தும் சரியாகும்.

கண்டங்கத்திரி வேரை நல்லெண்ணெயில் விட்டு காய்ச்சி ஆறவிட்டு ஆசனவாய் பகுதியில் தடவி வந்தால் புண்கள் ஆறும்.அதேபோல் கண்டங்கத்திரி இலையின் சாற்றை ஆசனவாய் பகுதியில் தடவி வந்தால் அங்குள்ள புண்கள் விரைவில் ஆறி விடும்.