ஒரு நொடியில் என் வாழ்க்கையே மாறிப்போச்சு! ஆசிட் தாக்குதலுக்கு ஆளான நடிகையின் சகோதரி ஆதங்கம்!

0
176

ஒரு நொடியில் என் வாழ்க்கையே மாறிப்போச்சு! ஆசிட் தாக்குதலுக்கு ஆளான நடிகையின் சகோதரி ஆதங்கம்!

தேசிய விருது பெற்ற நடிகையான கங்கனா ரனாவத்தின் சகோதரி ரங்கோலி சந்தல் தன் மீது ஆசிட் ஊற்றப்பட்ட சம்பவம் பற்றி கட்டுரை ஒன்று எழுதியுள்ளார்.

ஆசிட் வீச்சு தாக்குதலில் இந்தியா நம்ப முடியாத அளவுக்கு முன்னணியில் இருக்கிறது. நாடு முழுவதும் ஆண்டுதோறும் பெண்களுக்கு எதிராக ஆசிட் வீச்சுத் தாக்குதல் அதிகரித்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் தீபிகா படுகோன் நடிப்பில் உருவான சப்பாக் திரைப்படம் அப்படி பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் வாழ்க்கையை ஒட்டி உருவாக்கப்பட்டதுதான்.

இந்தியாவின் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரனாவத்தின் சகோதரி ரங்கோலி சந்தலும் இதுபோல ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு ஆளானவர். சமீபத்தில் அவர் நாளிதழ் ஒன்றுக்கு எழுதிய கட்டுரையில் தனக்கு நடந்த கொடூரமான சம்பவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

அவரது கட்டுரையில் ‘என் மீது ஆசிட் வீசிய நபரின் பெயர் அவினாஷ் ஷர்மா. நாங்கள் இருவரும் ஒரே கல்லூரியில் ஒன்றாகப் படித்தோம். ஒரு நாள் அவர் என்னிடம் காதலைத் தெரிவித்தார். நான் அவர் காதலை ஏற்கவில்லை. அதனால் அதிருப்தியடைந்த அவர் என்னை ஏதாவது செய்யவேண்டும் என நண்பர்களிடம் கூறியுள்ளார்.

அதனை நான் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. பின் ஒருநாள் என் அறைக்கு யாரோ என்னை பார்க்க வந்திருப்பதாக சொல்ல நான் சென்ற போது என் முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்டது. ஒரு நொடியில் என் வாழ்க்கையே மாறிவிட்டது.’ எனக் கூறியுள்ளார்.

Previous articleபெண்களுக்கு நீலப்படம் அனுப்பிய தென்காசி இளைஞர்; விசாரணையில் போலீசார் சும்மா கிழி..!!
Next articleவெற்றிமாறன் & சூர்யா நடத்த இருக்கும் ஜல்லிக்கட்டு! இணையத்தில் வைரலான படத்தின் பெயர்!