மாரடைப்பால் கன்னட திரையுலகின் நடிகர் புனீத் ராஜ்குமார் மரணம்.பிரதமர் மோடி இரங்கல்

Photo of author

By Parthipan K

நடிகர் புனீத் ராஜ்குமார் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கன்னட திரையுலகின் முன்னணி நடிகரில் ஒருவர் புனீத் ராஜ்குமார் இவரின் (வயது 46). இவர் மாரடைப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்ட்டார்.
மேலும், ஐசியூவில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்த நிலையில்,மருத்துவ சிகிச்சை எவ்வித பலனும் இன்றி இன்று காலமானார்.

புனீத் ராஜ்குமார் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதனால், ரசிகர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்திருந்தன.

இதன்பின், புனித் ராஜ்குமாரின் உடல்நிலை மோசமான நிலையில் உள்ளது என்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது எனவும் தகவல் தெரிவித்த நிலையில்,அவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து,அவரது மறைவிற்கு தமிழக முதல்வர் மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,நடிகர் புனீத் ராஜ்குமார் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியது என்னவென்றால்,

“விதியின் ஒரு கொடூரமான திருப்பம், புனீத் ராஜ்குமார் என்ற ஒரு திறமையான நடிகரை நம்மிடமிருந்து பறித்து விட்டது. இது இவருக்கு இறப்பதற்கான வயது இல்லை.

இனி வரும் தலைமுறையினர் அவரது படைப்புகள் மற்றும் அற்புதமான ஆளுமைக்காக அவரை அன்புடன் நினைவுகூருவார்கள். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் பெரும் இரங்கல்கள். ஓம் சாந்தி”,என்று தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.

மேலும், புனித் ராஜ்குமார் அப்பு, ராஜகுமாரா,பவர் , மற்றும் பல படங்களில் நடித்து அவரது திறமையை வெளிபடுத்திருப்பார்