படத்தின் கதையை 2 வரியில் முடித்த கண்ணதாசன் !கண்ணீர் விட்ட பாலச்சந்தர்!

0
296
#image_title

கே.பாலச்சந்தர் அவர்கள் 1967ஆம் ஆண்டு பாமா விஜயம் என்ற படத்தை எடுத்திருந்தால் அது அவருடைய நான்காவது படம்.

ஒரு குடும்பத்தில் வரவுக்கு மேல் செலவு செய்தால் என்ன விபரீதங்கள் நடக்கும் என்பதை உணர்த்தி காட்டியது இந்த படம்.

 

முதலில் கே பாலச்சந்தர் அவர்கள் நாடகங்கள் மூலம் மிகவும் பிரபலமாகி அதற்கு அடுத்தது தான் திரைப்படத்தில் அறிமுகமானார். 1965-ம் ஆண்டு வெளியாக நீர்குமிழி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கே.பாலச்சந்தர். தொடர்ந்து, தொடர்ந்து நாணல், மேஜர் சந்திரகாந்த் உள்ளிட்ட படங்கயை இயக்கினார் .

 

முத்துராமன், நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன், சவுகார் ஜானகி, காஞ்சனா, ராஜாஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தில் பாலையா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

 

எம்.எஸ்.விஸ்வநாதன் இசைமையமைத்துள்ளார். இந்த படத்தில் அனைத்து பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார். அப்படி ஒரு பாடலை கேட்ட பொழுது கே பாலச்சந்தரை அழ வைத்துள்ளார் கண்ணதாசன். தனது பாடல் வரிகளால் அனைவரையும் அழ வைப்பதே அவரது வேலையாக போயிற்று.

 

இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கிய கே.பாலச்சந்தர் படத்தை எடுத்தபின் படம் நான் நினைத்த மாதிரி வரவில்லை. ஏதோ ஒன்று குறைகிறது என்று நினைத்து தனது உதவியாளர்களுடன் பேசிய பொழுது. முக்கிய கேரக்டரான பாலையா வரவுக்கு மீறிய செலவு செய்யும் பெண்ணுக்கு உணர்த்துவது போன்ற ஒரு பாடலை வைத்தால் சரியாக இருக்கும் என்று உதவியாளர்கள் கூறுகின்றனர்.

 

இந்த பாடலை கண்ணதாசன் எழுதினால் சிறப்பாக இருக்கும் என்று சொல்ல. கண்ணதாசனை சந்தித்த பாலச்சந்தர் படத்தின் முழு கதையையும் சொல்லிவிட்டார். மேலும் தான் எடுத்த 13 ஆயிரம் அடி படத்தையும் எடிட் செய்து கண்ணதாசனுக்கு போட்டு காட்டியுள்ளார்.

 

பார்த்துவிட்ட கண்ணதாசன், வருமானத்திற்கு அதிகமாக செலவு செய்கிறார்கள் என்ன செய்வது என்று படத்தை கருத்தில் கொண்டு ”வரவு எட்டனா செலவு பத்தனா அதிகம் ரெண்டனா கடைசியில் துண்டனா” என்று சொல்கிறார். இதை கேட்ட கே.பாலச்சந்தர் தான் கதை சொல்லி எடுத்த படத்தை போட்டு காட்டி எல்லாம் செய்தும் தான் சொல்ல வந்ததை இரண்டே வரிகளில் சொல்லிவிட்டாரே என்று மிகவும் ஆச்சரியமடைந்துள்ளார் . அதன்பிறகு இதையே பாட்டாக கொடுங்கள் என்றும் கேட்டுள்ளார்.

 

இதை கேட்ட கண்ணதாசன் நான் பாடல் எழுதவே தொடங்கவில்லை. இது நான் போகிற போக்கில் சொன்ன வரிகள் என்று சொல்ல, இல்லை இதுதான் இந்த படத்திற்கு பொருத்தமாக இருக்கும் இதையே பாட்டாக கொடுங்கள் என்று சொல்ல கண்ணதாசனும் எழுதி கொடுத்துள்ளார். எழுதி முடித்தவுடன் இந்த பாடலை வாங்கி பொருளை உணர்ந்த கே பாலச்சந்தர் அவர்கள் கண்ணீரில் மூழ்கியுள்ளார். இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு எடுத்த படத்தை இரண்டே வரியில் பூர்த்தி செய்ததும், அவருக்கு எங்கிருந்து கண்ணீர் வந்தது என்றே தெரியவில்லையாம்.

Previous articleகுறைந்தது தங்கம் விலை..! பவுனுக்கு எவ்வளவு தெரியுமா?
Next articleஜெய்சங்கர் சொன்ன வார்த்தை! “அவர் ஆயிரம் சொன்னார்”! நான் பல்லாயிரம் செய்தேன்!- மகன்