மதுரை: விமான நிலையத்தில் குஷ்பு அளித்த பேட்டி: பா.ஜ., மகளிரணியை சேர்ந்தவர்களை பேரணிக்கு வர விடாமல் வீடு வீடாய் போய் கைது செய்து கொண்டு இருக்கிறார்கள். ஜனநாயக ரீதியாக எங்களால், பேரணியில் கலந்து கொள்ள முடியவில்லை. எதற்கு எங்களை தடுக்கிறீர்கள் என்று நாங்கள் கேள்வி கேட்கிறோம். மற்ற கட்சியினருக்கு அனுமதி கொடுக்கும் போது பா.ஜ.,வினர் சார்பில் பேரணி நடத்தும் போது எங்களை தடுக்கிறீர்கள்.
எதற்கு போலீசாரை ஏவி விடுகிறீர்கள். எங்களை எதற்கு கைது செய்து கொண்டு இருக்கிறீர்கள். பேரணிக்கு வர முயன்ற பெண்களை வீட்டு காவலில் வைக்கிறார்கள். பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விஷயம் பற்றி பேசும்போது, ஜோதிமணி எம்.பி., யோசித்துப் பேச வேண்டும். பேரணிக்கு அனுமதி தருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. பேரணிக்கு அனுமதி தரமாட்டார்கள் என்பது தெரியும் இவ்வாறு அவர் கூறினார். மேலும் அவர் கண்ணகி போல கையில் சிலப்பு எடுத்துக்கொண்டு போரட்டத்திற்கு வந்தார்.
மேலும் அதற்க்கு அண்ணாமலை கடும் கண்டன அறிக்கை வெளிட்டுள்ளார். அதில் அவர் கூறியது: அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்தும், தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தியும், பா.ஜ., மகளிரணி சார்பாக நடந்த நீதிப் பேரணியில் கலந்து கொண்ட, மாநில மகளிரணித் தலைவி உமாரதி, மொடக்குறிச்சி சட்டசபை உறுப்பினர் சரஸ்வதி, தேசியச் செயற்குழு உறுப்பினர் குஷ்பூ மற்றும் மகளிரணி நிர்வாகிகளைக் போலீசார் கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில், தி.மு.க.,வைச் சேர்ந்த பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்காகச் செயல்படும் தி.மு.க., அரசின் உண்மை முகம், பொதுமக்களிடையே அம்பலப்பட்டுக்கொண்டிருக்கிறது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார். பா.ஜ., மகளிர் அணியினர் கவர்னரை சந்தித்து தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து புகார் மனு அளிக்க உள்ளனர்.