பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக ஜீ தமிழ் சீரியல் நடிகை.!!

0
310

விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் ஆகிய டிவிகளில் பல்வேறு சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றன. சீரியல்களுக்கும் திரைப்படங்களைப் போன்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர் என்று கூறலாம். தற்போது இல்லத்தரசிகள் முதல் அனைத்து வயதினர் வரை அனைவரும் ரசித்து பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. குறிப்பாக இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் அதிகம்.

இந்நிலையில் சீரியலில் வெண்பா வுக்கும்-கண்ணம்மா வுக்கும் இடையே நடக்கும் போட்டியே சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. பாரதிகண்ணம்மா சீரியல் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ளது‌. ஹீரோயினாக நடிக்கும் ரோஷினி சீரியலில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை சோகம் அடையச் செய்துள்ளது.

தற்போது, தெரியவரும் தகவலின்படி அடுத்த இரண்டு வாரங்கள் மட்டுமே ரோஷினி கண்ணம்மாவாக நடிப்பார் என்றும். அதன்பின், அந்த கதாபாத்திரத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘யாரடி நீ மோகினி’ சீரியலில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்த நட்சத்திரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, லிசா மற்றும் நட்சத்திரா இருவரும் ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘யாரடி நீ மோகினி’ சீரியலில் மகளாக நடித்த அதே குழந்தை தற்போது பாரதிகண்ணம்மா சீரியலில் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், தற்போது பாரதிகண்ணம்மா சீரியல் மீண்டும் இவர்கள் இணைந்து நடித்தால் சீரியல் வேற லெவல் ஹிட்டாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து ஏகப்பட்ட டப்மேஷ் வீடியோக்களை உருவாக்கி இணையத்தில் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Previous articleBreaking: பாஜக நிர்வாகி கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.!!
Next articleகொரோனாவுக்கு எதிராக செயற்கை எதிர்ப்பு சக்தி?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here