KANUKAL PAIN: சிகிச்சை இன்றி கணுக்கால் வலிக்கான சிறந்த வீட்டு வைத்தியம் இதோ!!

Photo of author

By Divya

KANUKAL PAIN: சிகிச்சை இன்றி கணுக்கால் வலிக்கான சிறந்த வீட்டு வைத்தியம் இதோ!!

அன்றாட வாழ்வில் நம் கணுக்கால்கள் ஓய்வின்றி நிறைய வேலைகளை செய்கின்றது.இதனால் கணுக்கால் பகுதியில் வலி,வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.குறிப்பாக 35 வயதை கடந்தவர்களுக்கு கணுக்கால் வலி பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.

கால் பாதங்களை அழுத்தி நடக்க முடியாமல் கணுக்காலில் பொறுக்க முடியாத வலி ஏற்படும்.இதற்கு காரணம் கணுக்கால் பகுதியில் சிறு சிறு கட்டிகள் உருவாவது தான்.காலையில் உறக்கத்தில் இருந்து எழுந்த உடன் கால்களை தரையில் வைக்க முடியாத அளவிற்கு வலி ஏற்படும்.பின்னர் மெல்ல மெல்ல சரியாகும்.கால் பாதங்களில் ஒருவித எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும்.

கணுக்கால் வலிக்கான காரணங்கள்:

1)வாதம்
2)பித்தம்
3)கபம்

இதனால் கணுக்கால் பகுதியில் நீர் தேங்கி நாளடைவில் உப்பாக மாறுகிறது.இதனால் கணுக்கால் பகுதியில் கட்டிகள் உருவாகிறது.

கணுக்கால் வலி யாருக்கு ஏற்படும்?

1)பகல் தூக்கம்
2)அதிகப்படியான உடல் உழைப்பு
3)உடல் உழைப்பின்மை
4)உடல் பருமன்
5)மது மற்றும் புகைப்பழக்கம்

கணுக்கால் வலியை போக்கும் வீட்டு வைத்தியம்:

வீட்டு வைத்தியம் 01:

சாதம் வடித்த கஞ்சி சூடு பொறுக்கும் அளவிற்கு எடுத்து ஒரு அகலமான பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும்.இந்த கஞ்சியில் கால்களை சில ஊற வைத்து பிறகு க்ளீன் செய்து கொள்ளவும்.இப்படி தினமும் செய்து வந்தால் கணுக்கால் வலி முழுமையாக குணமாகும்.

வீட்டு வைத்தியம் 02:

ஒரு செங்கலை இரண்டாக உடைத்து ஒரு பகுதியை மட்டும் அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும்.கால் பாதங்கள் பொறுக்கும் அளவிற்கு சூடானதும் அதன் மீது கணுக்கால்களை வைக்கவும்.இப்படி செய்து வந்தால் கணுக்கால் வலி குறையும்.

வீட்டு வைத்தியம் 03:

ஒரு அகலமான பாத்திரத்தில் வெந்நீர் ஊற்றி கால் பாதங்களை சில நிமிடங்களுக்கு ஊற வைத்தால் கணுக்கால் வலி குறையும்.

வீட்டு வைத்தியம் 04:-

எருக்க இலையில் சிறிது நல்லெண்ணெய் தடவி தோசை கல்லில் வைத்து சூடாக்கி கணுக்கால் பகுதியில் வைத்து மசாஜ் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.