கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த வடசேரி பகுதியில் உள்ள திமுக நிர்வாகியான சீதா முருகன் என்பவர் வடசேரி அசம்பு ரோடு பகுதியில் கடந்த 11 ஆண்டுகளாக டெக்டைல்ஸ் நடத்தி வருகிறார்,இந்நிலையில் கடை கட்டிட உரிமையாளருக்கும் திமுகவைச்சேர்ந்த சீதா முருகன் என்பவருக்கும் கொடுத்தல் வாங்கலில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது,இதில் 35 லட்சம்.
ரூபாய் கடைக்காக சீதா முருகன் கொடுத்துள்ளதாகவும் அதன்படி 2023 வரை கடை நடத்த உரிமை கொடுத்ததாகவும் தெரிகிறது மேலும் 2023 ஜனவரியில் இந்த ஒப்பந்தம் முடிந்த நிலையில் சீதா முருகன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். தனக்கு நீட்டிப்பு செய்து தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
இந்நிலையில் கடையின் உரிமையாளர் என கூறக்கூடிய ராபின் என்பவர் இதுகுறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தாத நிலையில் இன்று அதிகாலை வழக்கறிஞர்கள் ரவுடிகள் என 50க்கும் மேற்பட்டோரை அழைத்து வந்து ஜேசிபி எந்திரம் மூலம் கடையை அடித்து உடைத்து பொருட்களை சேதப்படுத்தி உள்ளனர்.
அப்போது தகவல் அறிந்து வந்த சீதா முருகன் தடுத்துள்ளார், உடனே சீதா முருகனை அந்த கும்பல் கட்டி வைத்து அவர் கண் முன்னே கடையை துவம்சம் ஆக்கி உள்ளர். மேலும் அதன் முன்னே காவல் நிலையத்துக்கு சீதா முருகன் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் போலீசார் 2 மணி நேரம் கழித்து கடைகள் சேதப்படுத்தி பிறகு வந்ததாகவும் அப்போதும் 2 போலீஸ் மட்டுமே வந்ததகாவும் தெரிவித்துள்ளார்.
கடையில் இருந்து 2 லட்சம் ரூபாய் பணம்,கடையில் வைத்திருந்த சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டற்றவற்றை அந்த கும்பல் எடுத்துச் சென்றதாகவும் தெரிவித்தார். மேலும் போலீசார் உடனே வந்திருந்தால் இந்த பிரச்சனை நடந்திருக்காது எனவும் கூறினார். மேலும் அப்பகுதியில் தான் 15 வருடங்களாக திமுக கவுன்சிலராக இருந்துள்ள நிலையில் இதுவரை தனக்கு பாதுகாப்பாக இருந்தது.
ஆனால் தற்போது திமுக ஆட்சியில் திமுக நிர்வாகிக்கு இது போன்ற நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும் லட்சக்கணக்கான ரூ மதிப்புடைய ஜவுளிகள் சேதப்படுத்தியுள்ளனர். மொத்தம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் தனக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும். தனக்கு நீதி கிடைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.