கன்னியாகுமரி டு காஷ்மீர்! ராகுல் காந்தியின் இந்தியாவை ஒருங்கிணைப்போம் பாதயாத்திரை!
தற்பொழுது குஜராத் போன்ற மாநிலங்களில் அடுத்தடுத்து தேர்தல் வரவுள்ளது. அந்த வகையில் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் ராகுல் காந்தி 3500 கிலோமீட்டர் பாதயாத்திரை நடக்க உள்ளார். சென்னையில் இருந்து காஷ்மீர் வரை இந்தியாவை ஒருங்கிணைப்போம் என்பதன் அடிப்படையில் நடைப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதற்காக இன்று தமிழ்நாடு வந்த ராகுல் காந்தி முதன் முதலில் அவர் தந்தை மற்றும் முன்னாள் பிரதமருமான ராஜு காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
இவர் பாதயாத்திரை தொடங்க உள்ள நிலையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களும் கன்னியாகுமரி வரவுள்ளார். இன்று மாலை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இந்த பாதயாத்திரை தொடங்கி வைக்க உள்ளார். இந்த பாதயாத்திரை ஆனது 150 நாட்கள் நடைபெற உள்ளதாக கூறியுள்ளனர்.