ஜனவரி மாதம் 1ம் தேதி வரையில் பட்டாசுக்கு அதிரடி தடை! தீபாவளிக்கு ஆப்பு வைத்த மாநில அரசு!

0
72

தில்லியில் பட்டாசுகளை விற்பதற்கும், வெடிப்பதற்கும் மற்றும் சேமித்து வைப்பதற்கும், எதிர்வரும் ஜனவரி மாதம் 1ம் தேதி வரையில் தடை விதிக்கப்படுகிறது என்று அந்த மாநிலத்தின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

எதிர்வரும் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் இந்த வருடமும் பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த மாநிலத்தின் சுற்று சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தன்னுடைய வலைதள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,

டெல்லியில் இந்த முறை இணையதளம் மூலமாக பட்டாசு விற்பனைக்கும் மற்றும் நேரடி விற்பனைக்கும், தடை விதிக்கப்படுகிறது.இந்த கட்டுப்பாடு 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி வரையில் அமலிலிருக்கும் என கூறியுள்ளார்.

இந்த தடையை கடுமையாக அமல்படுத்துவதற்கு டெல்லி காவல்துறை, டெல்லி மாசுக்கட்டுப்பாட்டு குழு மற்றும் வருவாய் துறையுடன் ஒன்றிணைந்து செயல் திட்டம் வகுக்கப்படும் என்றும், அவர் தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் சென்ற வருடத்தை போல இந்த ஆண்டும் அனைத்து விதமான பட்டாசுகளின் உற்பத்தி, சேமிப்பு, விற்பனை மற்றும் பயன்பாடு, உள்ளிட்டவை முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது என்று அவர் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டிருந்தார்.