கிராமப்புறங்களில் தட்டைப்பயறு என்று அழைக்கப்படும் காராமணி மற்ற பயறுகளை விடவும் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கிறது.இந்த காராமணி செடி மற்றும் கொடி என இருவகை மூலம் வளர்கிறது.
காராமணியில் கால்சியம்,பொட்டாசியம்,பாஸ்பரஸ்,புரதம்,வைட்டமின் சி,நார்ச்சத்து உள்ளிட்டவை அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.இத்தனை ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காராமணியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.இது தவிர நாம் எதிர்பார்த்திராத மருத்துவ குணங்கள் இதில் நிறைந்து காணப்படுகிறது.
இந்த பயறில் கொழுப்புச்சத்து என்பது மிகவும் குறைவு.என்பதால் கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் இதை டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.காராமணியில் உள்ள நார்ச்சத்து செரிமான பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.
இரும்புச்சத்து நிறைந்த காராமணியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை,இரும்புச்சத்து குறைபாடு போன்ற பாதிப்புகள் குணமாகும்.இந்த காராமணியில் இருக்கின்ற வைட்டமின் சி மற்றும் புரதம் சருமம் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.
காராமணியில் இருக்கின்ற கால்சியம்,மெக்னீசியம் சத்துக்கள் எலும்புகளை வலிமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.காராமணியில் இருக்கின்ற மெக்னீசியம் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.
நார்ச்சத்துக்கள் நிறைந்த காராமணி மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வாக திகழ்கிறது.இதில் உள்ள வைட்டமின் பி1 அதாவது தயாமின் சத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.உடல் சோர்வை போக்க காராமணி பயறை உட்கொள்ளலாம்.காராமணியில் இருக்கின்ற நார்ச்சத்து வயிற்றுப்போக்கு பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.
காராமணியில் உள்ள மெக்னீசியம் சத்து தலைமுடி உதிர்வு பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.காராமணி வாயு பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதால் வாயுத் தொல்லை இருப்பவர்கள் இதை தவிர்த்துவிடுவது நல்லது.காராமணியில் இருக்கின்ற போலேட் சத்துக்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.