கர்ணன் படம் ரிலீஸ் செய்ய தடை! அதிர்ச்சியில் தனுஷ் ரசிகர்கள்!

Photo of author

By Rupa

கர்ணன் படம் ரிலீஸ் செய்ய தடை! அதிர்ச்சியில் தனுஷ் ரசிகர்கள்!

தனுஷ் தற்சமயத்தில் பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.அதில் அடுத்ததாக வெளியே வர இருக்கும் படம் தான் கர்ணன்.இதில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி பெருமளவு வைரலாகி வருகிறது.அந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.ஏப்ரல் 9 ஆம் தேதி இப்படம் வெளி வர இருக்கிறது.

இந்த படத்தின் பண்டாரத்தி புராணம் என்ற பாடலானது தமிழகத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தை மட்டமாக கூறும் வகையில் இந்த பாடல் உள்ளதாக மதுரை சுப்ரமணியபுரம் பகுதியை சேர்ந்த புல்லட் பிரபு என்பவர் மதுரை பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் புல்லட் பிரபு கூறியது,பண்டாரத்தி புராணம் பாடலை நீக்கும் வரை கர்ணன் படத்தை வெளியிடக் கூடாது எனவும் அதன்பின் தணிக்கைத்துறை வழங்கிய சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.இது தொடர்பான வழக்கு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்,எஸ்.ஆனந்தி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.

இதனை விசாரித்த நீதிபதிகள் திரைப்பட தணிக்கைத் துறை மண்டல அலுவலர்,இயக்குனர் மாறி செல்வராஜ்,தயாரிப்பாளர் கலைபுலி தாணு,திங்க் மியூசிக் இந்தியா யூடியூப் சேனலுக்கு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.பிறகு விசாரணையை ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி ஒத்தி வைத்துள்ளனர்.இந்த தீர்ப்பைக் கேட்ட தனுஷ் ரசிகர்களுக்கு படம் ரிலீஸ் ஆவது தாமதம் ஆகுவதைக் கண்டு பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.