ஸ்டாலின் கூறிய அந்த ஒற்றை வார்த்தை! நிகழ்ச்சியில் மு. க. அழகிரி!

0
128

தமிழகத்திலேயே இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்துவிடலாம் என்று எதிர்கட்சியான திமுக ஏதேதோ செய்து பார்க்கின்றது.தமிழக சட்டசபை தேர்தல் வருவதை முன்னிட்டு அந்த கட்சி கிட்டத்தட்ட தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டது. இதனை பார்த்த அந்த கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் என்னதான் முன்கூட்டியே தேர்தல் தொடர்பாக செயல்பட்டாலும் இவ்வாறு செயல்படுவது நல்லதல்ல என்று சொல்லும் அளவிற்கு திமுகவின் செயல்பாடு மிக தீவிரமாக இருந்தது.

இதற்கு நடுவில் திமுகவில் அந்த கட்சிக்கு தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுக்க வந்திருக்கும் பிரசாந்த் கிஷோர் அந்தக் கட்சியின் சீனியர்களோடு எப்பொழுதும் மோதிக் கொண்டே இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.ஏனென்றால் அந்தக் கட்சியை சார்ந்த மாவட்ட செயலாளர்கள் எல்லோரும் அந்தந்த மாவட்டத்தில் தங்களுடைய கட்சியை பலப்படுத்தும் விதமாக பல நலத்திட்ட உதவிகளை அவர்களுடைய சொந்த காசில் செய்தார்கள். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அவர்கள் செலவு செய்த தொகையில் ஒரு ரூபாய் கூட கட்சியின் தலைமையால் வழங்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதனால் ஸ்டாலின் மீது திமுகவை சார்ந்த பல மாவட்ட செயலாளர்கள் அதிர்ச்சியில் இருந்தார்கள் அதோடு திமுகவின் இளைஞர் அணிச் செயலாளரும் ஸ்டாலினின் ஒரே மகனுமான உதயநிதி ஸ்டாலின் திமுகவை சார்ந்த பல மூத்த தலைவர்களை அவர்கள் வகித்து வந்த பதவிகளிலிருந்து தூக்கி வீசிவிட்டு இளைஞர்களை அந்த பதவிக்கு அமர்த்தினார்.

அந்த சமயத்தில் உண்மையிலேயே திமுக ஒரு புதிய மாற்றத்திற்கு தயாராகி வருகிறது என்பது போன்ற பிம்பம் தமிழகம் முழுவதும் புலப்படத் தொடங்கியது. ஆனால் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அந்த கட்சியை ரசிக்கும் விதமாக இருந்தாலும்கூட உள்ளே இருக்கக்கூடிய அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் யாரும் உதயநிதியின் இந்த செயலை ரசிக்கவில்லை.

மாறாக அவர்களுக்குள் உதயநிதியை எண்ணி கடுகடுத்துக் கொண்டுதான் இருந்தார்கள்.ஆகவே உதயநிதியை பற்றிய புகார் தலைமையை போய் சேர அவரும் ஆரம்பத்தில் எதுவும் கண்டுகொள்ளவில்லை என்று சொல்லப்பட்டது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல திமுகவின் சீனியர்கள் ஸ்டாலினுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார்கள்.

அந்த அழுத்தத்தின் விளைவாக ஸ்டாலின் அவர்கள் உதயநிதியின் செயல்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.அதோடு திமுக அதற்காக தேர்தல் பணிகளை செய்துவரும் பிரசாந்த் கிஷோர் திமுகவில் இருக்கின்ற சீனியர்கள் யாரையும் மதிக்கவில்லை என்ற புகார் எழுந்தது.இதற்கிடையில் ஸ்டாலினின் சொந்த அண்ணனான முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனிக் கட்சி தொடங்கப் போவதாக புது குண்டை போட்டார். இதனால் ஸ்டாலின் சற்றே கலங்கி போனார் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த நிலையில், நான் கட்சியை தொடங்குகிறேனோ இல்லையோ தெரியாது. ஆனால் ஸ்டாலினை ஆட்சியில் அமர விட மாட்டேன் என்று மிக ஆவேசமாக சூளுரைத்தார் அழகிரி.
இருந்தாலும் இதுவரையில் அவர் அமைதியாக தான் இருந்து வருகின்றார். இந்த நிலையில் ஸ்டாலின் ஒரு பேட்டியின்பொழுது மு.க.அழகிரி அண்ணன் என்று தெரிவித்ததால் அதைக்கேட்டு நெகிழ்ச்சி அடைந்து விட்டாராம் அழகிரி. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரது குடும்பத்தார்கள் அழகிரியை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருப்பதாக தெரிகிறது.

தேர்தல் நெருங்கி வந்து கொண்டிருக்கும் இந்த சமயத்தில் அழகிரி ஏதாவது செய்து விடுவாரோ என்று ஸ்டாலின் குடும்பத்தார் மிகுந்த பயத்தில் இருப்பதால் அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறுகிறார்கள். ஆட்சிக்கு வந்ததும் அழகிரி அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படும் என்று தெரிவித்து அவரை சமாதானப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.அதே சமயத்தில் ஸ்டாலின் தரப்பு என்ன தான் சமாதானம் செய்தாலும் அவருடைய நோக்கம் என்ன என்பதை நன்கறிந்த அழகிரி இதற்கு சம்மதிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதனால் ஸ்டாலின் சற்று பயத்துடனேயே இருந்து வருகிறாராம்.