பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவில் கர்ணன் திரைப்படத்திற்கு கௌரவம்.!!

Photo of author

By Vijay

பெங்களூரில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கர்ணன் திரைப்படம் கலந்துகொண்டு விருதை பெற்றுள்ளது.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் கர்ணன். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ரஜிஷ விஜயன் நடித்திருந்தார்.மேலும், இந்த படத்தில் யோகிபாபு,, நட்ராஜ், லால் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்தார். மேலும், இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் தான் கர்ணன்.

கடந்த மாதம் கர்ணன் திரைப்படம் ஜெர்மனியில் ஃபாரங்பர்ட் நகரில் நடைபெறும் புதிய தலைமுறை இந்திய படங்களுக்கான திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளதாக இயக்குனர் மாரி செல்வராஜ் சமீபத்தில் தெரிவித்திருந்த நிலையில், தற்போது பெங்களூருவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள தேர்வாகியுள்ளது.

அந்த வகையில், தற்போது சிறந்த படத்துக்கான விருதை கர்ணன் திரைப்படம் பெற்றுள்ளது. அந்த விருதை கர்ணன் திரைப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் பெற்றுக்கொண்டுள்ளார்.