கர்நாடக சட்ட சபை தேர்தல் முடிவுகள்!! வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்தது!!
கடந்த மே 10ம் தேதி கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது 8 மணி முதல் தொடங்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளில், மொத்தமாக 2615 வேட்பாளர்கள் போட்டியிட்டு உள்ளனர்.
பாஜக சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 223 வேட்பாளர்களும், ஜனதாதளம் (எஸ்) சார்பில் 207 வேட்பாளர்களும், ஆம் ஆத்மி கட்சி சார்பில் 217 வேட்பாளர்களும் போட்டியிட்டு உள்ளனர். இதில் ஆண்கள் 2430 பேரும், பெண்கள் 184 பேரும், திருநங்கை ஒருவரும் உள்ளனர்.
நடந்து முடிந்த தேர்தலில் 73.19% ஓட்டுகள் பதிவாகி உள்ளது. இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் என்னும் பணி தொடங்கியுள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, தற்போது மின்னணு வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. மொத்தம் 36 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.
வாக்கு என்னும் பணிகளில் 4256 மேற்பார்வையாளர்கள், 4256 உதவியாளர்கள், 224 வருவாய்த்துறை அதிகாரிகள், 317 உதவி வருவாய்த்துறை அதிகாரிகள், 450 கூடுதல் வருவாய்த்துறை அதிகாரிகள், மேலும் 4256 நுண் அலுவலர்களும் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.
இது தவிர வாக்கு எண்ணிக்கை மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் முன்னணியில் உள்ளது. பாஜக சற்று பின்தங்கியுள்ளது. இந்த முடிவுகள் காலை நிலவரப்படி மட்டுமே,மதியத்திற்குள் கார்நாடகாவில் ஆட்சியை பிடிப்பது யார் என தெரிந்துவிடும்.