கண்ணாடி போட தேவையே இல்லை!! இந்த உணவுகளை சாப்பிடுங்க!!

0
164
#image_title

கண் பார்வை என்பது எல்லோருக்கும் முக்கியமான ஒன்று. கண்களில் ஏற்படும் பாதிப்பானது அவ்வளவு சுலபமாக சரியாவது இல்லை. முன்பெல்லாம் 40 வயதுக்கு மேல் தான் கண் பார்வை குறைதல், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண்களில் புரை போன்ற பிரச்சினைகள் ஏற்படும். ஆனால் தற்போது சிறு குழந்தைகளுக்கு கூட கண் பார்வை கோளாறு உண்டாகிறது. இதற்கு காரணம் டிவி, செல்போன்,.வீடியோ கேம்ஸ் போன்றவற்றை கண் சிமிட்டாமல் பார்ப்பதால் தான், கண்கள் சோர்ந்து பார்வை கோளாறு ஏற்படுகிறது. இந்த பார்வை கோளாறுகள் சிறு வயதிலேயே ஏற்படாமல் இருக்க சில வகை உணவுகளை நாம் உட்கொண்டால் எந்த வயதிலும் கண்ணாடி போடாமல், பார்வை திறன் மங்காமல் இருக்கும். இப்படிப்பட்ட பார்வை கோளாறுகளை தவிர்க்க சில உணவுகளை நாம் உட்கொண்டால் இந்த பிரச்சினைகளிலிருந்து நம் கண்களை காத்து கொள்ளலாம்.

முதலாவதாக கீரையை நாம் அதிகம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். கண் பார்வையை பொறுத்தவரை பொன்னாங்கண்ணி கீரை மற்றும் முருங்கை கீரை இது இரண்டிலும் உள்ள சத்துகள் பார்வையை பாதுகாக்கும். முருங்கை கீரையில், விட்டமின் E மற்றும் அமினோ.ஆசிட் உள்ளது. இதை நீங்கள் பொரியல் செய்து சாப்பிடலாம், சூப் செய்து குடிக்கலாம், துவையலாக எடுத்து கொள்ளலாம். பொடி செய்து தோசையில் போட்டு சாப்பிடலாம்.

இரண்டாவதாக பழ வகைகள், எலுமிச்சை, பப்பாளி, திராட்சை இந்த மூன்று பழங்களும் நம் கண்களில் உள்ள ரெட்டினாவை பாதுகாக்கும். அடுத்ததாக கேரட், இதில் விட்டமின் A மற்றும் பீட்டா கேரட்டின் உள்ளதால் நம்முடைய விழிகளையும், ரெட்டினாவையும் ஆரோக்கியமாக வைக்கும். கேரட்டை ஜுஸ் ஆகவும், பொரியல் மற்றும் வெறுமனே கூட சாப்பிடலாம். நான்காவதாக நட்ஸ். நட்ஸ்சில் வால்நட் உள்ள ஒமேகா 3, நம் கண்களை வலுப்படுத்த உதவுகிறது. இதை தினமும் சாப்பிடுவதால் கண்களில் எந்த விதமான பிரச்சினைகளும் வராது. வால்நட் பதிலாக வேர்க்கடலை மற்றும் வெல்லம் கலந்துஎடுத்துக்கொள்ளலாம். கடைசியாக தண்ணீர் . தண்ணீரை அதிக அளவில் எடுத்து கொள்வதால் உடலில் பல பிரச்சினைகள் நீங்கும். உடலில் உள்ள கழிவுகள் நீங்கும். தண்ணீரை பருகும் போது கண்களில் உள்ள கழிவுகளும் நீங்குகின்றன. ஆகையால் அதிக அளவு தண்ணீரை பருகினாலும் கண்களை பாதுகாக்கலாம். இந்த உணவு பொருட்கள் எல்லாம் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்


 

author avatar
CineDesk