மேகதாது அணை விரைவில் கட்டப்படும் கர்நாடக முதல்வர்! போர் கொடி தூக்குமா தமிழகம்?
தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் பலகாலமாக காவேரி தொடர்புடைய பிரச்சனைகள் நடந்த வண்ணமாக தான் உள்ளது.தமிழக அரசானது இதுபற்றி பல கோரிக்கைகளை மத்திய அரசிடம் கூறியது. ஆனால் தமிழக அரசு கேட்கும் எந்தவித கோரிக்கைகளுக்கும் மத்திய அரசு பதில் அளிப்பதில்லை.அதுமட்டுமின்றி சுப்ரீம் கோர்ட் காவிரி ஆற்றின் மேகதாது அணை கட்டுவதற்கு தடைவிதித்துள்ளது. ஆனால் கர்நாடகா அதை சிறிதும் மதிக்காமல் மேகதாது அணையை கட்ட பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
மேகதாது அணை கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கக் கூடாது என கர்நாடக முதல்வர் நம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். இதற்கு எதிராக நமது முதல்வர் மு .க .ஸ்டாலின் கூறியதாவது,ஒருபோதும் அணை கட்டுவதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.அவ்வாறு கட்டினால் எங்களின் விவசாயிகள் அதிகளவு பாதிக்கப்படுவார்கள் என கூறி பதில் கடிதம் ஒன்றை எழுதினார்.காவிரி எங்கள் வாழ்வுரிமை என்று கூறினார்.
அதுமட்டுமின்றி மு .க .ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு முதன் முறையாக பிரதமர் மோடியை நேரில் காணச் சென்றார்.அவ்வாறு காணச் சென்றபோது மேகதாது அணை கட்டுவது குறித்தும்,விவசாயிகளின் வாழ்வுரிமை பாதிக்கபடுவது குறித்தும் அவரிடம் கோரிக்கை வைத்தார். அத்தோடு மட்டும் விட்டுவிடாமல் நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகனும் மத்திய நீர்வளத் துறை மந்திரியை சந்தித்து மேகதாது அணை கட்டுவது பற்றி தமிழக அரசுக்கு ஆதரவு தெரிவிக்குமாறும்,தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
ஆனால் இன்றளவும் மத்திய அரசு எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. மத்திய அரசு எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காத காரணத்தினால் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டம் நேற்று நடந்து முடிந்த நிலையில் இன்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங்-கை பெங்களூரில் சந்தித்தார்.
அந்த கூட்டத்தின் முடிவில் மத்திய நீர்வளத் துறை மந்திரி கூறியதாவது ,கர்நாடக மேகதாது அணை கட்டுவதற்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என இவ்வாறு கூறினார். கர்நாடகா முதல்-மந்திரி எடியூரப்பாவும் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில் மேகதாது அணை கட்டும் பணியை விரைவில் தொடங்குவோம் எனக் கூறினார். தற்போதைய நிலவரப்படி மத்திய அரசானது கர்நாடகாவிற்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. இதனால் கர்நாடகாவை எதிர்த்து தமிழ்நாடு பல கண்டனங்களை தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.