நேற்று வெளியான கர்நாடக தேர்தல் முடிவுகள்! நோட்டாவிற்கு இத்தனை வாக்குகளா!!

Photo of author

By Sakthi

நேற்று வெளியான கர்நாடக தேர்தல் முடிவுகள்! நோட்டாவிற்கு இத்தனை வாக்குகளா!
கர்நாடக மாநிலம் சட்டசபை தேர்தலின் முடிவுகள் நேற்று அதாவது மே 13ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி 130க்கும் மேற்பட்ட தொகுதிகளை பெற்று வெற்றி அடைந்துள்ளது. இதையடுத்து இந்த தேர்தலில் நோட்டா சின்னத்திற்கு எவ்வளவு வாக்குகள் விழுந்திருக்கின்றது என்பதை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தேர்தல்களில் எந்த கட்சிக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் வாக்கு செலுத்த நோட்டா என்ற நடைமுறை 2013ல் கொண்டு வரப்பட்டது. நோட்டா என்றால் None Of The Above. அதாவது மேலே குறிப்பிட்டவர்களில் யாருக்கும் இல்லை என்பது தான் அர்த்தம். இந்த நோட்டா சின்னம் ஒவ்வொரு வாக்களிக்கும் மின்னணு இயந்திரத்திலும் கடைசியாக அமைந்திருக்கும்.
இதையடுத்து தேர்தல் தொடர்பான தகவல்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம் இந்த தேர்தலில் நோட்டாவிற்கு எவ்வளவு வாக்குகள் விழுந்தது என்பதை அறிவித்துள்ளது. கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் 2.6 லட்சம் பேர் நோட்டாவிற்கு வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நோட்டாவிற்கு மட்டும் 2,60,000க்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைத்துள்ளன.