கார்த்தி-சூர்யா படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்ட சூர்யா!

0
307

கார்த்தி-சூர்யா படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்ட சூர்யா!

கார்த்தி மற்றும் ஜோதிகா இணைந்து நடிக்கும் படம் ஒன்று உருவாகி வருகிறது என்பதும் இந்த படத்தை தமிழில் ‘பாபநாசம்’ என்ற படத்தையும் பல மலையாள படங்களையும் இயக்கிய இயக்குனர் ஜித்துஜோசப் இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த முடிவடைந்து பின்னணி உள்பட தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் இன்று மாலை வெளியாகவிருப்பதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டைட்ல் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இந்த படத்திற்கு ‘தம்பி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சூர்யாவின் தம்பி கார்த்தி நடிக்கும் ‘தம்பி’ போஸ்டரை அண்ணன் சூர்யா வெளியிடுவது பொருத்தமாகவே கருதப்படுகிறது

கார்த்தி, ஜோதிகா, ஆகிய இருவரும் அக்கா-தம்பியாகவும் இவர்களது தந்தையாக சத்யராஜூம் நடிக்கும் இந்த படத்திற்கு ‘96’ படபுகழ் கோவிந்த் வசந்த் இசையமைத்துள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை வயாகம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் பாரலல் மைண்ட்ஸ் புரடொக்சன்ஸ் நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.

Previous articleமகாத்மா காந்தி சாலை விபத்தில் உயிரிழந்தாரா? அதிர்ச்சி தகவல்
Next articleபடிப்படியாக குறையும் தங்கத்தின் விலை! சென்னையில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் என்ன?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here