மகாத்மா காந்தி சாலை விபத்தில் உயிரிழந்தாரா? அதிர்ச்சி தகவல்

0
217

மகாத்மா காந்தி சாலை விபத்தில் உயிரிழந்தாரா? அதிர்ச்சி தகவல்

இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தவர்களில் முக்கிய காரணமானவர்களில் ஒருவரான மகாத்மா காந்தி, கோட்சே என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது உலகிற்கே தெரியும். இந்த நிலையில் அவர் சாலை விபத்தில் உயிரிழந்தார் என ஒடிசா மாநில பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட ஒரு புத்தகத்தில் குறிப்பிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஒடிசா மாநில பள்ளிக்கல்வி துறை மகாத்மா காந்தி குறித்து வெளியிட்ட புத்தகம் ஒன்றில் மகாத்மா காந்தி விபத்தில் உயிரிழந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் மகாத்மா காந்தி 150வது பிறந்த நாள் கொண்டாடப்படும் போது வெளியிட்ட ஒரு சிறப்பு புத்தகத்தில் தான் இந்த தவறான தகவல் உள்ளது

இந்த புத்தகத்தில் மகாத்மா காந்தி குறித்து குறிப்பிடப்பட்டுள்ள தகவலுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உடனடியாக மாநில அரசு இதற்கு பொறுப்பேற்று வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. மகாத்மா காந்தி குறித்த தவறான தகவல் இடம்பெற காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒடிஷா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஏர்டெல் வாடிக்கையாளரா? உடனே மாறுங்கள் என அறிவுறுத்தல்
Next articleகார்த்தி-சூர்யா படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்ட சூர்யா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here