அமித்ஷாவிற்கு பதில் சந்தானபாரதி..போஸ்டரை ட்ரோல் செய்த கார்த்தி சிதம்பரம்..!!
தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் விதமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தமிழகம் வருகிறார். இந்நிலையில் அவரை வரவேற்கும் விதமாக போஸ்டர் ஒன்று அடித்து ஒட்டப்பட்டுள்ளது.
அதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் புகைப்படத்திற்கு பிரபல தமிழ் நடிகர் மற்றும் இயக்குனர் சந்தான பாரதியின் புகைப்படத்தை வைத்துள்ளனர். இந்த சம்பவம் நடப்பது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தலின்போதும் அமித் ஷாவிற்கு பதிலாக சந்தானபாரதியின் புகைப்படத்தை தான் அடித்திருந்தார்கள்.
இருவரும் பார்ப்பதற்கு கொஞ்சம் ஒரே மாதிரி இருப்பதால் குழப்பத்தில் மாற்றி அடித்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த போஸ்டரை கிண்டல் செய்யும் விதமாக சந்தானபாரதி ஃபேன் கிளப் என்று குறிப்பிட்டு கார்த்திக் சிதம்பரம் இந்த போஸ்டரை அவரது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
ஆனால் அதேசமயத்தில் இந்த போஸ்டரை பாஜகவினர் அடிக்கவில்லை என்று அவர்கள் சார்பில் கூறப்படுகிறது. ஏனெனில் இந்த போஸ்டரில் பாஜக சம்பந்தப்பட்ட யார் பெயரும் இடம்பெறவில்லை. மொட்டை போஸ்டராகவே உள்ளது. அதனால் இந்த போஸ்டரை காங்கிரஸ் மற்றும் திமுக கட்சியினர் தான் அடித்து ஒட்டியிருப்பார்கள் என்று குற்றம் சாட்டி வருகிறார்கள்