மூன்று நாட்கள் முன்பாகவே ரிலீஸ் ஆகும் கார்த்தியின் சர்தார் திரைப்படம்!

0
349

மூன்று நாட்கள் முன்பாகவே ரிலீஸ் ஆகும் கார்த்தியின் சர்தார் திரைப்படம்!

கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது.

நடிகர் கார்த்தி நடிப்பில் இந்த ஆண்டில் விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸாகி வெற்றி பெற்றன. அடுத்து தீபாவளிக்கு அவர் நடித்துள்ள சர்தார் திரைப்படம் ரிலீஸாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி கவனத்தை ஈர்த்தது.

கார்த்தி, ராஷி கண்ணா மற்றும் லைலா ஆகியோர் நடிக்கும் ‘சர்தார் திரைப்படத்தை பி எஸ் மித்ரன் இயக்கியுள்ளார். ஜி வி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர். படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். சர்தார் திரைப்படம் பேன் இந்தியா ரிலீஸாக 5 மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

தீபாவளி திங்கள் கிழமை வருவதால் மூன்று நாட்கள் முன்பாகவே அக்டோபர் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படமும் அதே நாளில்தான் ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே ஆண்டில் கார்த்தியின் மூன்று படங்கள் ரிலீஸ் ஆவது இதுவே முதல்முறை. 15 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் கார்த்திக்கு 2022 ஆம் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது.  சர்தார் படத்துக்குப் பிறகு கார்த்தியின் 25 ஆவது படத்தை இயக்குனர் ராஜு முருகன் இயக்க உள்ளார்.

Previous articleபூம்ராவுக்கு பதில் யார்?…. இன்னும் முடியாத குழப்பம்… ஆஸ்திரேலியாவுக்கு பறக்கும் மூன்று வீரர்கள்!
Next articleதமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here