பூம்ராவுக்கு பதில் யார்?…. இன்னும் முடியாத குழப்பம்… ஆஸ்திரேலியாவுக்கு பறக்கும் மூன்று வீரர்கள்!

0
268

பூம்ராவுக்கு பதில் யார்?…. இன்னும் முடியாத குழப்பம்… ஆஸ்திரேலியாவுக்கு பறக்கும் மூன்று வீரர்கள்!

இந்திய அணியில் இணைய மூன்று வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு பறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய அணி டி 20 தொடரில் விளையாட ஆஸ்திரேலியாவுக்கு கடந்த வாரமே சென்றது. இந்திய அணிக்கு டி 20 உலகக்கோப்பையில் மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது பூம்ராவின் விலகல். கடந்த சில ஆண்டுகளாக இந்திய பந்துவீச்சின் நம்பிக்கையாக பூம்ரா இருந்து வருகிறார். இந்திய அணியில் மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடும் பவுலராக அவர் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் முதுகுவலியால் அவதிப்பட்டு வருகிறார். தொடர் தொடங்க உள்ள நிலையில் இன்னும் மாற்றுவீரர் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல உள்ளனர். மேலும் அவர்களில் ஒருவர் ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பதிலாக தேர்வு செய்யப்படுவார். மாற்றுவது குறித்து வியாழக்கிழமை (அக்டோபர் 14) இறுதி முடிவு எடுக்கப்படும் என சொல்லப்படுகிறது.

ஷமி ஆஸ்திரேலியாவுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பது, அவர் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. தாக்கூர் மற்றும் சிராஜ் இருவரும் தென்னாப்பிரிக்காவில் நடந்து முடிந்த ODI தொடரில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்,

இந்நிலையில்  “தாக்கூர் மற்றும் சிராஜ் நன்றாகச் செய்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் ஷமிக்கு வாய்ப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்படலாம்” என்று அந்த பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அணியுடன் பயணிக்க இருந்த தீபக் சாஹர் காயம் அடைந்து ஆஸ்திரேலியா செல்ல முடியாததால் சிராஜ் மற்றும் தாக்கூர் செல்கிறார்கள்.

Previous articleமேலும் ஒரு வீரருக்குக் காயமா?… இந்திய அணிக்கு மேலும் பின்னடைவு!
Next articleமூன்று நாட்கள் முன்பாகவே ரிலீஸ் ஆகும் கார்த்தியின் சர்தார் திரைப்படம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here