உதவி இயக்குனராக இருக்கும்போது சூர்யாவுக்காக எழுதிய கதை… நடிகர் கார்த்தி பகிர்ந்த சீக்ரெட்!

0
209

உதவி இயக்குனராக இருக்கும்போது சூர்யாவுக்காக எழுதிய கதை… நடிகர் கார்த்தி பகிர்ந்த சீக்ரெட்!

நடிகர் கார்த்தி நடித்துள்ள விக்ரம் திரைப்படம் இன்னும் சில தினங்களில் ரிலீஸ் ஆக உள்ளது.

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘விருமன்’ படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகுகிறது. இந்த படத்தைக் கார்த்தியின் அண்ணன் சூர்யா தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது.

படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் சில தினங்களுக்கு முன்னர் ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடந்தது. வெளிநாட்டுக்கு இசைக் கச்சேரிக்காக சென்றுள்ள இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இந்தியா திரும்பியுள்ள நிலையில் அவர், சூர்யா, கார்த்தி, அதிதி மற்றும் இயக்குனர் ஷங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர். இதையடுத்து அன்று படத்தின் டிரைலரும் வெளியானது.

படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ள நிலையில் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. அதில் பேசிய கார்த்தியிடம் சூர்யாவை வைத்து படம் இயக்கும் எண்ணம் உண்டா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கார்த்தி “நான் ஆயுத எழுத்து படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி முடித்த போது அண்ணனுக்காக ஒரு கதை எழுதினேன். அது ஒரு பயோபிக் கதை. அந்த படத்தை இயக்குவது எனது கனவு” எனக் கூறியுள்ளார். நடிகர் கார்த்தி நடிக்க வருவதற்கு முன்னர் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleமுதலமைச்சர் கட்சியில் வெளியேறத் தயாரா?பாஜக அவரைத் தடுக்க முன்வரவில்லையா?..
Next articleகைதி 2 படம் எப்போது தொடங்கும்? நடிகர் கார்த்தி அளித்த பதில்