சசிகலாவின் தலைமையின் கீழ் செல்ல இருக்கிறதா அதிமுக? எம்பியின் கருத்தால் பரபரப்பு!

0
75

அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராகவும், தமிழகத்தின் முதலமைச்சராகவும், இருந்த செல்வி ஜெயலலிதா சென்ற 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். அவருடைய மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பல மாற்றங்கள் சிக்கல்கள் என்று நிகழ்ந்திருக்கிறது.அவருடைய மறைவுக்குப் பின்னர் முதலமைச்சராக பொறுப்பேற்ற ஓபிஎஸ் கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவை ஒருமனதாக தேர்ந்தெடுத்தார்.

அதன்பின்னர் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அந்த சமயத்தில் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிக் கொண்ட ஓபிஎஸ் தர்மயுத்தம் என்று தன் பங்கிற்கு தன்னுடைய ஆதரவாளர்களை வைத்து ஒரு போராட்டத்தை நடத்தினார்.

அதன் பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற பின்னர் இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோர் ஒன்றாக இணைந்து செயல்பட்டார்கள். அதோடு 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழுவை கூட்டி அதிமுகவில் 2 புதிய பதவிகள் உருவாக்கப்பட்டது.

அதன்படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் அவர்களும் இணை ஒருங்கிணைப்பாளராக ஈபிஎஸ் அவர்களும் தேர்வு செய்யப்பட்டார்கள்.அதோடு அந்த பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் சசிகலா அந்த பதவியில் இருந்து நிரந்தரமாக தூக்கி எறியப்பட்டார். சிறையிலிருந்து விடுதலையான சசிகலா சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின் போது நான் அரசியலில் இருந்து சிறிது காலம் விலகி இருக்கப் போவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த சட்டசபை தேர்தலுக்கு பிறகு சசிகலா அதிமுக நிர்வாகிகள் மற்றும் தன்னுடைய ஆதரவாளர்களுடன் தொடர்ச்சியாக தொலைபேசியின் மூலமாக உரையாடி வரும் ஆடியோவை வெளியிட்டு வருகின்றார். இது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் உள்ளிட்டோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் சசிகலாவிடம் உரையாடும் நபர்களை அதிரடியாக நீக்கி வருகிறார்கள்.

இந்த சூழலில் அதிமுக உள்கட்சி அரசியல் நிலவரம் தொடர்பாக அதிக கவனம் செலுத்தி கருத்து தெரிவித்து வந்து கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மயிலாடுதுறையில் நேற்றையதினம் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.அந்த சந்திப்பின்போது பன்னீர்செல்வம் மற்றும் பழனிச்சாமி என்ற இரு தலைமையின் கீழ் ஆதிமுக செயல்பட வாய்ப்பில்லை. இப்படியான சூழ் நிலையை வைத்து கவனித்துப்பார்க்கும்போது விரைவிலேயே அதிமுக சசிகலாவின் தலைமையின் கீழ் கொண்டுவரப்பட லாம் என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்திருக்கின்றார்.