KARU NOCHI MOOLIGAI: என்னது கருநொச்சி மூலிகை இத்தனை நோய்களை குணமாக்குமா?
நம் பாரம்பரிய மருத்துவத்தில் கருநொச்சியின் பங்கு அதிகம்.நொச்சி மூலிகைகளில் நீர் நொச்சி,ஐந்து இலை நொச்சி,கருநொச்சி என பல வகைகள் இருக்கிறது.இதில் கருநொச்சி இலையில் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது.நொச்சி இலையின் வாசனை சுவாசப் பிரச்சனையை முழுமையாக போக்குகிறது.
பண்டைய காலத்தில் சளி,ஜலதோஷ பிரச்சனை இருந்தால் அதை சரி செய்ய கரு நொச்சி இலையை கொண்டு ஆவி பிடித்து சரி செய்து கொண்டார்கள்.ஆனால் இன்றைய நவீன உலகில் பாரம்பரிய வைத்தியம் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது.
கருநொச்சி இலையின் மருத்துவ குணங்கள்:-
1)கருநொச்சி இலையை அரைத்து 50 மில்லி அளவு சாறு அருந்தி வந்தால் செரிமானக் கோளாறு நீங்கும்.
2)கருநொச்சி சாறு உடல் மந்தம்,நரம்பு தளர்ச்சி,வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகளை சரி செய்ய உதவுகிறது.
3)உடலில் வலி,வீக்கம்,கட்டிகள் இருந்தால் கருநொச்சி இலையை தேங்காய் எண்ணையில் வதக்கி பாதிக்கப்பட்ட இடங்களில் பூசி வந்தால் பலன் கிடைக்கும்.
4)நொச்சி இலையை அரைத்து மூட்டு பகுதியில் தடவி பற்றுப்போட்டு வந்தால் அவை சில தினங்களில் குணமாகி விடும்.
5)சளி,தலைவலி உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் கருநொச்சி இலையை ஒரு கப் அளவு நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடிக்கலாம்.
6)ஆஸ்துமா,நுரையீரல் தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள் நொச்சி இலையை கொண்டு ஆவி பிடித்தால் பலன் கிடைக்கும்.
7)நொச்சி இலை சாற்றுடன் சிறிது மிளகுத் தூள் மற்றும் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி குணமாகும்.
8)நொச்சி இலையை அரைத்து வடித்து ஆற வைத்த கஞ்சியில் போட்டு கலக்கவும்.இதை உடலில் உள்ள புண்கள் மீது தடவினால் அவை சில தினங்களில் குணமாகி விடும்.