கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த ஆண்டு உடல்நலக் குறைவு ஏற்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி அவர் மறைந்தார்.
இதனையடுத்து அவர் மறைந்த தினமான இன்று அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதற்காக காலை 8 மணிக்கு திமுகவின் சார்பாக மவுன ஊர்வலம் நடத்தப்படுகிறது. இந்த அமைதி ஊர்வலம் அண்ணா சாலையிலிருந்து புறப்பட்டு மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் நோக்கி செல்கிறது.
இந்த அமைதி ஊர்வலத்ததிற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். இந்த அமைதி ஊர்வலத்தில் மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர். இதனையடுத்து மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தப்படுகிறது.
மேலும் இன்று மாலை 5 மணிக்கு முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு திக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்குகிறார். மேலும் இந்த சிலையை மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைக்கிறார். இதில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் கலந்து கொள்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஒய்எம்சிஏ மைதானத்தில் திமுகவின் சார்பாக பொதுக் கூட்டமும் நடைபெறுகிறது.
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.