அடடா!! இப்போ இவங்க தான் ட்ரெண்டா!!

Photo of author

By Parthipan K

அடடா!! இப்போ இவங்க தான் ட்ரெண்டா!!

Parthipan K

Updated on:

katyani-jagana-gonna-work-on-a-kannda-film

கடந்த சில நாட்களாகவே இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் மிகவும் பிரபலமாக வளர்ந்து வருபவர் கேட்யானி ஜெகநா.இவரது இயற்பெயர் காவியா. இவருக்கு தற்பொழுது 21 வயதாகிறது. இந்நிலையில், இவர் இரண்டு வாரத்திற்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரீல்சை வெளியிட்டார் .அதில் அவர் காஞ்சனா 2 படத்தில் வரும் வாயா என் வீரா என்ற பாடலுக்கு அழகான முக பாவங்களுடன் நடித்திருந்தார். அது சமூக வலைத்தளத்தில் மிகவும் வேகமாக ட்ரெண்ட் ஆனது.

தென்னிந்தியாவில் அந்த வீடியோவை பார்க்காதவர்களே இருக்க மாட்டார்கள் என்பதுபோல அதனை பலரும் பார்த்து ரசித்துவந்தனர். இதை தொடர்ந்து அவர் வெளியிட்ட அனைத்து வீடியோக்கலும் ட்ரெண்ட் ஆனது.

இன்ஸ்டாகிராமில் இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் 1 லட்சத்திலிருந்து 4 லட்சமாக உயர்ந்தது. இவர் தற்பொழுது கன்னடத்தில் ஒரு காதல் படத்தில் நடிக்க இருப்பதாக பல வதந்திகள் வெளியாகின்றன .இது எந்த அளவு உண்மை என தெரியவில்லை. இதுகுறித்து கேட்யானி ஜெகநாதவின் ரசிகர்கள் பலர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமெண்ட் மூலம் கேள்வி எழுப்பினார் ,ஆனால் அந்த எந்த கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை.

இவர் எப்பொழுதும் இவருடைய ரசிகர்கள் செய்யும் கமெண்ட்டை படித்து அதற்கு பதில் கமெண்ட் அல்லது பதில் வீடியோவை போடுவதை வழக்கமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இத்தனை கமெண்ட்களுக்கும் பதில் கூறாமல் இருப்பது இவர் உண்மையிலேயே படத்தில் நடிக்க போகிறார் என அவரது ரசிகர்களை சிந்திக்க வைக்கிறது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூட ஏதும் பதில் கூறவில்லை.