ப்ரேக்கப் செய்த கவின் – லாஸ்லியா?!

Photo of author

By Parthipan K

விஜய் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். பிக் பாஸ் முதல் சீசனில் ஜுலி, காயத்ரி சண்டை மூலம் பிரபலமடைந்தது. இரண்டாவது சீர்சன் ஐஸ்வர்யா தத்தாவால் பரபரப்பு ஏற்ப்பட்ட நிலையில், மூன்றாவது சீசனில் கவின், லாஸ்லியா காதலால் விஜய் தொலைக்காட்சிக்கு நல்ல தீனி கிடைத்தது.

சேரனை தனது அப்பா போல் இருப்பதாக கூறி சேரப்பா என்று அழைத்த லாஸ்லியா, கவினால் நிறைய சந்தர்ப்பங்களில் அவரை மனதளவில் காயப்படுத்தினார். இந்நிலையில் கவினும் லாஸ்லியாவும் வெளியே வந்தவுடன் அதே போல் காதலர்களாக வலம் வந்து பின்னர் திருமணம் செய்து கொள்வார்கள் என அவர்களின் ரசிகர்கள் கனவிலிருந்தனர்.

ஆனால் பிக் பாஸ் முடிந்தவுடன் இருவரை பற்றியும் எந்த தகவலுமில்லை. கவின் ‘லிஃப்ட்’ எனும் படத்தில் நடிப்பதாக வெளியானது. லாஸ்லியா ஆரி நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் இருவரும் பிரிந்து விட்டதாக தகவல் வெளியானது. தற்போது இருவரின் இன்ஸ்டாகிராம் பதிவு அதனை உறுதிப்படுத்துவது போல் அமைந்துள்ளது.

கண்ணாடி முன் புது ஆடையுடன் படமெடுத்து செல்ஃபி எடுத்துள்ள கவின் “எடுக்காத டிரஸ்ல போட்டோ எடுத்து வச்சுகிட்டா எப்பயாவது உதவும்” என்று பதிவிட்டிருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுப்பது போல் லாஸ்லியா அதே போன்ற செல்ஃபி எடுத்து “வாழ்க்கை உங்களுக்கு எதாவது கற்பிக்க நினைக்கிறது. அதனால் உங்களை கண்ணாடியில் பார்த்து அதை சரி செய்துக் கொள்ள முயற்சியுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இது இவர்களின் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.