டோக்கன்களை கலர் ஜெராக்ஸ் எடுத்து பிடிபட்ட மதுப்பிரியர்கள்!

0
90

கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட மதுக்கடைகள், ஊரடங்கை தளர்த்தியதையடுத்து சுமார் 45 நாட்களுக்குப் பிறகு கடந்த 7ம் தேதி திறக்கப்பட்டன.

மதுக்கடைகளில் நிதிமண்ற அறிவுறுத்திய கொரோனா தடுப்பு நடவடிக்கை எதையும் பின்பற்றப்படவில்லை என கூறி சென்னை உயர்நீதிமன்றம் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது. இதையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

அதனைத் தொடர்ந்து அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட உரிமையில்லை என கூறிய உச்ச நீதிமன்றம் உயர்நீதி மன்றம் விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டது. இதனையடுத்து இன்று முதல் கொரோனா பரவல் அதிகமுள்ள சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட சில பகுதிகளைத் தவிர்த்துப் பிற இடங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

ஒரு நாளைக்கு ஒரு கடையில் 500 பேருக்கு மட்டுமே மது விறக்கடும் என்று உச்சநீதிமன்றத்து தமிழக அரசு உறுதியளித்துள்ளது. இதனால் மதுபானத்தை வாங்க டோக்கன் முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. எனவே, மதுக்கடைகளில் குவிந்த மதுப்பிரியர்களுக்கு கிழமை வாரியாக பல வண்ணங்களில் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள கிழமை மற்றும் நேரத்தில் மதுவை வாங்கி செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், டோக்கனுக்காக மது பிரியர்கள் மணி கணக்கில் காத்து கிடக்கும் நிலையில், கடலூரில் டோக்கன் வாங்கிய சிலர் அதை கலர் ஜெராக்ஸ் எடுத்து விற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்த காவல்துறை உடனடியாக மோசடியில் ஈடுபட்ட 16 பேரை கைது செய்து செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

author avatar
Parthipan K