டிரெடிஷனல் உடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் அழகிய புகைப்படம்!! கிறங்கிபோன நெட்டிசன்கள்!!

0
155

டிரெடிஷனல் உடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் அழகிய புகைப்படம்!! கிறங்கிபோன நெட்டிசன்கள்!!

காவியா அறிவுமணி கோலிவுட் சின்னத்திரையில் முக்கியமான ஒரு சீரியலில் நடித்து வருகிறார். அத்துடன் காவியா ஒருபுறம் மாடலிங்கும் செய்து வருகிறார். இதனை அடுத்து, சமீபத்தில் சிறிது மாதங்களுக்கு முன் விஜே சித்ரா அவர்கள் இறந்த பின் இவரே பாண்டியன் ஸ்டோர்ஸில் நடித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து, பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்துக் கொண்டிருந்த இவர், அதன்பின் பாண்டியன் ஸ்டோர்ஸில் அனைவருக்கும் மிகவும் பிடித்த கேரக்டரான முல்லை என்ற கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆனார். ஆனால் ரசிகர்கள் சித்ராவை ஒப்பிடும்போது காவியா அறிவுமணியை முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை.

தற்போது காவ்யா தன்னுடைய கேரக்டரில் மிகவும் அசத்தி வருவதனால், ரசிகர்கள் இவரை முழுமையாக முல்லையாக ஏற்றுக்கொண்டு விட்டனர். அத்துடன் இவருக்கென முல்லை ஃபேன்பேஜ் என்று புதிதாக உருவாக்கி, இவரை டேக் செய்தும், இவரை குறித்து பல போஸ்ட்களையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

https://www.instagram.com/p/CSBOyoULHFm/?utm_source=ig_web_copy_link

மேலும், இவர் தன்னுடைய கதாபாத்திரத்தில் மிகவும் தத்ரூபமாக நடித்து வருவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இவர் கதிருக்கு உறுதுணையாக இருப்பது மட்டுமல்லாமல், கதிர் மீது மிகவும் பாசமாக உள்ளார்.

இந்த நிலையில் முல்லையாக வலம் வரும் காவியா, சமூக வலைதளங்களில் பல புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். மற்ற நடிகைகளைப் போலவே இவரும் இவருடைய சமூகவலைத்தள பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில், அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் மிகவும் வைரலாகி வருகிறது . அத்துடன் அதனைக் கண்ட அழகியே என்று பாடி வருகின்றனர்.

Previous articleடோக்கியோ ஒலிம்பிக்!! இந்தியாவின் உண்மையான ஹீரோ!! குத்துசண்டை வீரர் சதீஷ் குமார்!!
Next articleகோவையில் இவர்களது நடமாட்டம்! எச்சரிக்கை விடுத்த போலீசார்!