சொந்த தொகுதியிலேயே வெற்றி பெற முடியவில்லை! அவர் திமுக ஆட்சியை கலைப்பாரா? அண்ணாமலையை கிண்டல் செய்த சந்திரசேகர் ராவ்

Photo of author

By Rupa

சொந்த தொகுதியிலேயே வெற்றி பெற முடியவில்லை! அவர் திமுக ஆட்சியை கலைப்பாரா? அண்ணாமலையை கிண்டல் செய்த சந்திரசேகர் ராவ்

சில தினங்களுக்கு முன்பு அண்ணாமலை கேசிஆர் ஐ விமர்சனம் செய்திருந்தார். எவ்வாறு மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசியல் கலைக்கப்பட்டதோ அதே நிலைமைதான் தெலுங்கானவிற்கும் என கூறியிருந்தார். அதேபோல விரைவில் தமிழ்நாட்டில் உள்ள திமுக ஆட்சியையும்   கலைக்க முடியும் என கூறினார். தமிழ்நாட்டிலும் மகாராஷ்டிராவை போலவே ஓர் ஏக் நாத் ஷிண்டே வர வாய்ப்புள்ளதாக கூறி விமர்சனம் செய்தார்.

இதற்கு தெலுங்கானா முதல்வர் தற்போது தக்க பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாட்டில் தற்போது உள்ள திமுக ஆட்சியை கலைக்க போவதாக அண்ணாமலை கூறினார். ஆனால் தமிழ்நாட்டில் தனது சொந்த தொகுதியில் கூட அவரால் வெற்றி பெற முடியவில்லை? அவ்வாறு இருக்கையில் எப்படி ஆட்சியை கலைக்க போகிறார்? அதேபோல தான் மாகாராஷ்டிரா  உத்தவ் தாக்ரேவிற்கு ஏற்பட்ட நிலைதான் எனக்கும் ஏற்படும் என அண்ணாமலை கூறி இருந்தார். சூழ்ச்சனமாக ஆட்சியை கலைப்பது தான் ஜனநாயகமா? இதுதான் உங்கள் அரசியலா? என கேசிஆர் கேட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி தெலுங்கானாவில் நாங்கள் 103 எம்எல்ஏக்களை வைத்துள்ளோம். இதர  கட்சிகளோடும் எங்களுக்கு 110 எம்எல்ஏக்கள் துணை உள்ளது. எங்களை கலைத்து தான் நீங்கள் அரசியல் நடத்தப் போறீங்களா? இதுதான் உங்களின் ஜனநாயக அரசியலா என்று கே சி ஆர் கேள்வி எழுப்பியுள்ளார்.இவ்வாறு கேசிஆர் அண்ணாமலையை  விமர்சனம் செய்தது சமூக வலைத்தளங்களில் வைராலக பரவி வருகிறது.