பூஜை அறையில் இதை வைத்தால் நினைத்தது நடக்கும்!

Photo of author

By Kowsalya

நினைத்தது நடக்க பூஜை அறையில் இதை வைத்தால் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். நினைத்த காரியம் வெற்றியும் பெறும்.பூஜை அறையில் என்ன வைக்க வேண்டும் என்பது பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

ஒரு சிலருக்கு என்ன தான் பூஜைகள் செய்தாலும் மனதில் நினைத்தது நடக்க வேண்டும் என்ற பிரார்த்தனையே அதிகமாக இருக்கும்.

ஒவ்வொரு முறையும் இறைவனிடம் நல்லது நடக்க வேண்டும், காரியம் வெற்றி பெற வேண்டும், வீட்டிலுள்ளவர்கள் நலம் பெற வேண்டும், வீடு தொழிலும் செழிப்பாக இருக்க வேண்டும், வியாபாரம் செழிக்க வேண்டும் என்று ஏதாவது ஒரு பிரார்த்தனையை இறைவனிடம் வேண்டிக் கொண்டே இருப்போம்.

பலபேருக்கு உடலில் உபாதைகள் அதிகமாக இருக்கும் உடல் உள்ள நோய்களை நீக்கி விடு கடவுளே என்று கடவுளை மனமுருகி வேண்டிக் கொள்வார்.

இப்படி பலரும் பல விதமான பிரார்த்தனைகளை கடவுளிடம் முன்வைப்பார்கள்.

அவர்கள் நினைத்தது அனைத்தும் நடைபெற வேண்டுமெனில் ஒரு மஞ்சள் துணியில் ஒரு ரூபாய் நாணயத்தை முடி போட்டு குலதெய்வ படத்திற்கு கீழ் அல்லது இஷ்ட தெய்வத்தின் முன் வைத்து வேண்டிக்கொண்டால் நினைத்த காரியம் நடக்கும்.

எந்தக் காரியத்தை நினைத்து நாணயத்தை முடிந்து வைத்தீர்களோ‌‌ அந்த காரியம் விரைவில் நடக்கும். இங்கு நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்த ஒரு வழிமுறைதான்.

அந்தக் காலத்தில் அம்மை நோய்கள் அதிகமாக இருக்கும். அம்மை நோய் வந்து விட்டாலே உடனே பூஜை அறைக்கு சென்று மஞ்சள் துணியில் ஒரு ரூபாய் நாணயத்தை முடிந்து கடவுளிடம் இந்த ‘அம்மை நோய் விரைவாக குணம் அடைந்து விட வேண்டும் கடவுளே’ என்று வேண்டிக் கொள்வார்கள். அப்படி அம்மை நோய் தீர்ந்ததும் உடனடியாக அந்த முடிந்து வைத்த நாணயத்தை எடுத்து கொண்டு சென்று‌ அம்மன் உண்டியலில் போட்டு விடுவார்கள்.

இப்படி வழிவழியாக நினைத்தது நடக்க வேண்டும் என்றால் ஒரு ரூபாய் நாணயத்தை முடிந்து வையுங்கள்.

இது உங்களது குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்திற்கு முடிந்து வைக்கலாம்.அப்படி முடிந்து வைத்த நாணயத்தை நீங்கள் நினைத்தது நடந்துவிட்டால்  எந்த தெய்வத்தை வேண்டிக்கொண்டு முடிந்து வைத்தீர்களோ, அந்த தெய்வத்தின் உண்டியலில் சேர்த்து விடுவது மிக மிக நல்லது.

ஒரு ரூபாய் நாணயம் என்பது மிக சிறியதாக இருக்கலாம். ஆனால் அதன் மூலம் கிடைக்கக்கூடிய பலன்கள் என்பது அளவற்றது. கண்டிப்பாக இதனை மஞ்சள் துணியில் தான் கட்ட வேண்டும். வெள்ளை வேட்டியை எடுத்து மஞ்சளில் நனைத்து எடுத்து விட்டு அதில் முடிந்து வைக்கலாம்.

அப்படி முடிந்து வைக்கும் பொழுது நமது அனைத்து பிரார்த்தனைகளும் நிறைவேறும் என்பது சாத்தியமான ஒன்று.